»   »  கர்நாடகத்திலும் சிவாஜி திருட்டு விசிடி

கர்நாடகத்திலும் சிவாஜி திருட்டு விசிடி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கர்நாடக மாநிலம் கோலாரில், பெங்களூரில் சிவாஜி படத்தின் திருட்டு விசிடிக்கள் நூற்றுக்கணக்கில் பிடிபட்டன.

ரஜினிகாந்த் நடித்துள்ள சிவாஜி படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சென்னையில், சிவாஜி படத்தின் திருட்டு விசிடிக்கள் மற்றும் டிவிடிக்கள் சிக்கின. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவாஜி படத்தின் திருட்டு விசிடி சிக்கியது இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில், தற்போது கர்நாடகத்திலும் சிவாஜி பட திருட்டு விசிடிக்கள் பெருமளவில் சிக்கியுள்ளன.

இதுதொடர்பாக சிவாஜி படத்தின் கர்நாடக மாநில விநியோக உரிமையைப் பெற்றுள்ள எச்.டி.கங்கராஜு கூறுகையில், கோலாரில் சிவாஜி பட திருட்டு விசிடிக்கள் புழக்கத்தில் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸார் நடவடிக்கையில் இறங்கி திருட்டு விசிடிக்களைப் புழக்கத்தில் விட்ட ஐந்து பேரைக் கைது செய்துள்ளனர். கோலாரில் உள்ள வீடியோ லைப்ரரி ஒன்றில் இந்த திருட்டு விசிடிக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன என்றார் கங்கராஜு.

எத்தனை திருட்டு விசிடிக்கள் சிக்கின என்பதை கங்கராஜு தெரிவிக்கவில்லை. இருப்பினும் 200க்கும் மேற்பட்ட திருட்டு விசிடிக்கள் சிக்கியதாக தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil