»   »  ஐ-டோன்களிலும் சிவாஜி சாதனை!

ஐ-டோன்களிலும் சிவாஜி சாதனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவாஜி படத்தின் வசனங்கள், பாடல்கள் அடங்கிய ரிங் டோன்களும், காலர் டோன்களும் (ஐ-டோன்கள்) செல்போன் உபயோகிப்பாளர்களைக் கலக்க ஆரம்பித்துள்ளன. அதிலும் சிவாஜி சாதனை படைத்து வருகிறது.

சிவாஜி வந்தாலும் வந்தது, எங்கு பார்த்தாலும் அதே பேச்சுதான். அரங்கு நிறைந்த காட்சிகளுடன் உலகம் முழுவதும் திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் திருவிழாக் கூட்டத்தோடு கல்லாக் கட்டிக் கொண்டுள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி.

சிவாஜிக்குக் கிடைத்துள்ள இந்த பிரமாண்ட வரவேற்பு செல்போன் நிறுவனத்திருக்கும் செமத்தியான பிசினஸைக் கொடுத்துள்ளது. சிவாஜி படத்தில் இடம் பெற்றுள்ள பஞ்ச் வசனங்கள், பாடல்களை ரிங் டோன்களாகவும், காலர் டோன்களாகவும் மாற்றி புழக்கத்தில் விட்டுள்ளனர்.

தமிழே தெரியாத பலரும் சிவாஜி படப் பாடல்களை டவுன்லோடு செய்து சந்தோஷித்து வருகின்றனர். சிவாஜி படத்தில் ரஜினி பேசும் பேரைக் கேட்டவுடனேயே சும்மா அதிருல்ல என்ற பஞ்ச் டயலாக்கையும் பலர் டவுன்லோடு செய்து வருகின்றனர்.

சிவாஜி படத்தின் ட்யூன்களையும், பஞ்ச் வசனங்களையும் காலர் ட்யூன்களாக மாற்றி வெளியிடும் உரிமையை ஹங்கமா மொபைல்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த நிறுவனம் சிவாஜி படத்தின் ரிங் டோன்கள் மற்றும் காலர் ட்யூன்களை 33 நாடுகளில் 70 நிறுவனங்கள் மூலமாக புழக்கத்தில் விட்டுள்ளது.

இதுதவிர கேம்ஸ்கள், படங்கள், வீடியோக்கள் மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு ஹங்கமா வழங்குகிறது. ஒரு நாளைக்கு 50,000 டவுன்லோடுகள் வரை செய்யப்படுவதாகவும், இந்திய ரிங்டோன், காலர் ட்யூன் வரலாற்றில் இது ஒரு புதிய சாதனை என்றும் ஹங்கமா கூறுகிறது.

இந்தியா தவிர ஆசிய பசிபிக் நாடுகள், ஐரோப்பிய நாடுகளிலும் கூட சிவாஜி ஐ-டோன்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறதாம். அமெரிக்கா, ஜப்பானிலும் கூட சிவாஜி மேட்டர்களை டவுன்லோடு செய்வதில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாம்.

ஹங்கமா மொபைல்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சலீம் மோபானி கூறுகையில், சிவாஜி ரசிகர்களிடமிருந்து தினசரி ஆயரிகக்கணான டவுன்லோடு கோரிக்கைகள் வருகின்றன. இது எங்களை பிரமிக்க வைத்துள்ளது.

ஓவர்லோடு காரணமாக எங்களது சர்வர்கள் 37 நிமிடங்களுக்கு கிராஷ் ஆகி விட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்திய சினிமாவில் மட்டுமல்ல, உலக சினிமாவிலும் கூட ரஜினி சரித்திரம் படைத்து விட்டார் என்று சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் என்கிறார் மோபானி.

ஒவ்வொரு நாளும் சிவாஜி படைத்து வரும் சாதனையைப் பார்க்கும்போது கின்னஸ் சாதனையைத் தவிர மற்ற எல்லா சாதனைகளையும் அது படைத்து விடும் என்று தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil