»   »  சிகாகோ தமிழ் அமைப்புக்கு உதவும் சிவாஜி

சிகாகோ தமிழ் அமைப்புக்கு உதவும் சிவாஜி

Subscribe to Oneindia Tamil

சிகாகோவில் உள்ள தமிழ்நாடு அறக்கட்டளக்கு நிதி சேர்ப்பதற்காக சிவாஜி திரைப்படம் இன்று விசேஷமாக திரையிடப்படுகிறது.

கோலிவுட், யுஎஸ்ஏ மற்றும் பரத் கிரியேஷன்ஸ் இணைந்து இந்த நல நிதிக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஜூலை 1ம் தேதி சிகாகோவில் சிவாஜி திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்படவுள்ளது.

இதில் வசூலாகும் நிதி முழுவதும் தமிழ்நாடு அறக்கட்டளைக்கு அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளது. இந்த அமைப்பு தமிழகத்தில் உள்ள மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியவர்கள், படிப்புதவி, பள்ளிகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தொண்டுகளில் ஈடுபட்டுள்ளது.

தங்களது அமைப்புக்கு உதவுவதற்காக சிவாஜியின் உதவியை தமிழ்நாடு அறக்கட்டளை நாடியது. இதையடுத்து சிவாஜி சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நல்லதுக்காகவும் சிவாஜி பயன்படுகிறது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மறைமுகமாக உதவிக் கரம் நீட்டுகிறார் என்பதற்காக சந்தோஷப்படலாம்.

இதற்கிடையே சிகாகோவாவில் தொடர்ந்து சிவாஜி வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து 3 வாரங்களாக ஓடிய முதல் தமிழ்ப் படம் என்பது சிகாகோவில் சிவாஜி படைத்துள்ள புதிய சாதனையாகும்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil