»   »  சிவாஜிக்கு சென்சார் உறுப்பினர்கள் எதிர்ப்பு

சிவாஜிக்கு சென்சார் உறுப்பினர்கள் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சிவாஜி படத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் படங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்று தணிக்கை வாரியத்தைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முனவர் பாட்சா, ராணி கிருஷ்ணன், கோகிலா சுவாமிநாதன் ஆகியோர் தணிக்கை வாரிய உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

இவர்கள் தணிக்கை வாரியத்தில் உறுப்பினராக உள்ள பாபு ராமசாமி என்பவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், சிவாஜி படத்தில் வரும் வில்லன் ஆதி கேசவன் அலுவலகத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் படங்கள் இருப்பது போல காட்சி வருகிறது.

சிவாஜி பட வில்லன் தமிழகத்தைச் சேர்ந்தவராக காட்டப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களின் படங்களைத்தான் அவரது அலுவலகத்தில் இருப்பது போல காட்டியிருக்க வேண்டும்.

ஆனால் தேசியத் தலைவர்களின் படங்களை வில்லன் அலுவலகத்தில் இருப்பது போன்று காட்டியிருப்பது கண்டனத்துக்குரியது.

இந்தக் காட்சி பிரதமரையும், சோனியா காந்தியையும் அவமரியாதை செய்வது போல உள்ளது. எனவே இந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்க முயல வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு பிரமுகர் இந்தக் காட்சியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் மனு சரியாக இல்லை என்று கூறி உயர்நீதிமன்றம் அதை நிராகரித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil