»   »  சென்னையில் சிவாஜிக்கு ரூ. 7.2 கோடி!

சென்னையில் சிவாஜிக்கு ரூ. 7.2 கோடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி, சென்னையில் மட்டும் ரூ. 7.2 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாக சென்னை நகர விநியோகஸ்தரான அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தொடர்ந்து சிவாஜி அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. நகரில் 14 தியேட்டர்களிலும், புறநகர்களில் 26 தியேட்டர்களிலும் சிவாஜி திரையிடப்பட்டுள்ளது.

படம் ரிலீஸாகி 5 வாரங்கள் ஆகி விட்டது. இந்த நிலையில் 100 சதவீத லாபத்துடன் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. 6வது வாரத்தின் தொடக்கத்தில் சிவாஜியின் சிட்டி வசூல் ரூ. 7.2 கோடியைத் தொட்டுள்ளது.

அபிராமி ராமநாதன் படத்தை ரூ. 6.2 கோடிக்கு வாங்கினார். தற்போது போட்ட முதலை ஐந்தே வாரங்களில் எடுத்து விட்டார்.

பெரும்பாலான தியேட்டர்களில் சிவாஜியை 100 நாட்கள் வரை ஓட்ட முடிவெடுத்துள்ளனர். எனவே வசூல் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு எகிறும் எனக் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் மாத இறுதி வரை சிவாஜி தொடர்ந்து தற்போதுள்ள தியேட்டர்களிலேயே ஓட்டப்படவுள்ளது. அதன் பிறகு அஜீத்தின் கிரீடம் படத்துக்காக சில தியேட்டர்கள் காலியாகவுள்ளன.

சிவாஜியின் நான் ஸ்டாப் ஓட்டத்தை கிரீடம் வந்து நிறுத்துமா? பொருத்திருந்து பார்ப்போம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil