»   »  சிவாஜி தொடர்ந்து முதலிடம்

சிவாஜி தொடர்ந்து முதலிடம்

Subscribe to Oneindia Tamil

50வது நாளை நெருங்கியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி, தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய படம் சிவாஜி. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் உலகெங்கும் 800க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் சிவாஜி ரிலீஸானது.

சென்னையில் இதுவரை இல்லாத அளவாக 40க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் ரிலீஸானது. தற்போது இதில் பாதி அளவு தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

படம் வெளியாகி நாளையுடன் 50 நாட்களாகிறது. இருந்தும் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக சிவாஜி ஓடிக் கொண்டிருக்கிறது.

படத்தின் திரைக்கதையில் பல ஓட்டைகள் இருந்தபோதிலும் கூட ரஜினி என்ற மந்திரம், படத்தை வெற்றிப் படமாக்கி, வசூலையும் வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது.

திரையிட்ட தியேட்டர்களிலும் எல்லாம் படம் செத்தியான வசூலைக் கொடுத்துள்ளது. 7வது வார இறுதியில், சிவாஜிக்கு சென்னையில் மட்டும் ரூ. 10 கோடி வசூலாகியுள்ளது. சென்னை நகரில் விநியோகம் செய்ய சிவாஜியை ரூ. 6.2 கோடி கொடுத்து வாங்கினார் அபிராமி ராமநாதன். தற்போது இவர் பெரும் லாபம் பார்த்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் டாப் 5 படங்களில் சிவாஜிதான் முதலிடத்தில் உள்ளது. அஜீத்தின் கிரீடம் 2வது இடத்தில் நிற்கிறது. கிரீடம் ஐந்து தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

3வது இடத்தை யாரும் எதிர்பாராத வகையில் ஆங்கிலப் படமான புரூஸ் வில்லியின் டை ஹார்ட் 4.0 பெற்றுள்ளது. இப்படம் 7 தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சுந்தர்.சி. ஹீரோவாக நடித்துள்ள வீராப்பு 90 முதல் 95 சதவீத கலெக்ஷனுடன் 4வது இடத்தில் உள்ளது.

சிரஞ்சீவி நடித்துள்ள சங்கர்தாதா ஜிந்தாபாத் படத்திற்கு சென்னையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் சென்னையில் நான்கு தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. இப்படம் 5வது இடத்தில் உள்ளது.

கரண் நடித்துள்ள தீ நகர் படம்தான் கடைசி இடத்தில் உள்ளது. இருப்பினும் படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil