»   »  கல்யாணம் செய்யவில்லை - ஷோபனா

கல்யாணம் செய்யவில்லை - ஷோபனா

Subscribe to Oneindia Tamil
Shobana
யாரையும் நான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை. அப்படி வெளியாகியுள்ள செய்திகள் தவறு என்று நடிகை ஷோபனா மறுத்துள்ளார்.

மறைந்த நாட்டியப் பேரொளி பத்மினியின் உறவுப் பெண்ணும், சிறந்த நடிகையும், டான்ஸருமான ஷோபனா, தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.

சமீபகாலமாக அவர் முழு மூச்சாக நடனத்தில் இறங்கி விட்டார். வயதைத் தாண்டியும் கூட இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் ஷோபனா, இணையதளம் மூலம் தனக்குப் பிடித்த மாப்பிள்ளையைப் பார்த்துள்ளதாகவும், அவரைக் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.

டிசம்பரில் இந்தக் கல்யாணம் நடைபெறும் எனவும் அந்த செய்திகள் கூறின. ஆனால் அந்த செய்தியை ஷோபனா மறுத்துள்ளார்.

இதுகுறித்து ஷோபனா கூறுகையில், இது மும்பையைச் சேர்ந்த ஒரு பத்திரிகை கிளப்பி விட்டுள்ள வதந்தி செய்தி. நான் திருமணம் குறித்து இன்னும் தீர்மானிக்கவே இல்லை. அப்படி ஒரு வேளை திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் அதை மறைக்க வேண்டிய அவசியமோ, தயக்கமோ எனக்கு இல்லை.

எனது திருமணச் செய்தியைப் படித்து நான் மிகவும் மன வருத்தம் அடைந்தேன். மும்பைக்காரர்கள்தான் இப்படி வதந்தி கிளப்பி விடுகிறார்கள் என்றால் தமிழ் பத்திரிகைகளும் அதை பின்பற்ற வேண்டுமா?

எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்திகளை என்னிடம் கேட்டு உறுதி செய்து கொண்ட பின்னர் போடுங்கள், ப்ளீஸ் என்கிறார் ஷோபனா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil