twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷோலே எடிட்டர் இப்போ குடிசைவாசி!

    By Shankar
    |

    Sholay Movie
    இந்தியாவின் எவர்கிரீன் கிளாஸிக் படங்களில் ஒன்று ஷோலே. சஞ்சீவ் குமார், தர்மேந்திரா, அமிதாப் பச்சன், ஹேமமாலினி மற்றும் அம்ஜத்கான் நடிப்பில், ஜி பி சிப்பி - ரமேஷ் சிப்பி இயக்கத்தில், ஆர்டி பர்மன் இசையில் வெளியான இந்தப் படம் சரித்திரம் படைத்தது, வசூலிலும் தரத்திலும்.

    இந்தப் படத்தின் வெற்றிக்கு பல காரணங்கள் உண்டு. படத்தின் கச்சிதமான படத்தொகுப்பும் அதில் ஒன்று. அதற்குக் காரணமானவர் எம் எஸ் ஷிண்டே.

    ஷோலே மட்டுமல்ல.. தர்மேந்திராவின் சீதா அவுர் கீதா, ரமேஷ் சிப்பியின் மற்றொரு வெற்றிப் படமான சாகர் என பல படங்களில் பணியாற்றிய இவர் இப்போது வசிப்பது... மும்பையின் மெகா குடிசைப் பகுதியான தாராவியின் குடிசையொன்றில்!!

    81 வயதாகும் ஷிண்டேவை அவரது மகள் அச்லா கவனித்துக் கொள்கிறார். பாலிவுட்டில் ஷிண்டே செய்த சாதனைகள், பெற்ற விருதுகள் எதுவுமே அவருக்குக் கைகொடுக்கவில்லை என்பதுதான் சோகம்.

    மெகா பட்ஜெட்டில் உருவான ஷோலே படத்தின் எடிட்டர் என்ற முறையில் ஷிண்டே வாங்கிய தொகை ரூ 2000!

    "சிப்பியின் படங்களுக்கு நான் பெற்றது ரூ 2000. ஆனால் சம்பளத்தை நான் பெரிதாக நினைக்கவில்லை. காரணம் வெளிப்படங்களில் பணியாற்றவும் சிப்பி என்னை அனுமதித்ததுதான்", என்கிறார் ஷிண்டே.

    ஷிண்டே பணியாற்றியவை அனைத்துமே பெரிய வெற்றி பெற்ற படங்கள்தான். அவருக்கு பல விருதுகளும் கிடைத்துள்ளன. 48 ஆண்டுகள் ஒரு குடியிருப்பில் வசித்துள்ளனர் ஷிண்டேவும் அவர் மகளும். அந்தக் கட்டடம் இடிந்துவிட்டதும், வேறு இடத்துக்குப் போகவேண்டிய நிலை.

    "எங்களின் பொருளாதார வசதி, தாராவியின் குடிசையில் இருக்கத்தான் அனுமதித்து", என்கிறார் ஷிண்டேயின் மகள் அச்லா.

    உதவலி கேட்டு ஷிண்டே யாரிடமும் போகவில்லையாம். ஆனால் அவர் மகள் பல முறை விண்ணப்பித்துள்ளார் சினிமா சங்கங்கள் மற்றும் அரசுகளுக்கு. ஆனால் உதவி செய்ய திரையுலகமும் முன்வரவில்லை... மராட்டிய அல்லது மத்திய அரசும் கண்டுகொள்ளவில்லையாம்!

    English summary
    M S Shinde, the man who has edited over 100 hit films, including Sholay, Seeta Aur Geeta and Sagar, has been living in PMGP Colony, Dharavi, for the last six months.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X