»   »  'ஷோலே' தயாரிப்பாளர் ஜி.பி.சிப்பி மரணம்

'ஷோலே' தயாரிப்பாளர் ஜி.பி.சிப்பி மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Sholay movie still
இந்தியத் திரையுலகின் பிரமாண்ட படமான ஷோலேவைத் தயாரித்த ஜி.பி. சிப்பி மரணமடைந்தார். அவருக்கு வயது 92.

இந்தியத் திரையுலகின் மிகப் பிரமாண்ட படங்களில் ஷோலேவும் ஒன்று. 1975ம் ஆண்டு வெளியான ஷோலே இன்றளவும் இந்திய திரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம்.

ஷோலேவைத் தயாரித்தவர் ஜி.பி.சிப்பி. 92 வயதாகும் சிப்பி கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோபால்தாஸ் பரமானந்த் சிப்பி என்ற இயற்பெயரைக் கொண்ட ஜி.பி.சிப்பி, பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத் நகரில் 1915ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்தவர். சிந்தி இனத்தைச் சேர்ந்தவர்.

50 ஆண்டுகளாக திரைத் துறையில் கோலோச்சி வந்த சிப்பி, 17 படங்களைத் தயாரித்துள்ளார். 6 படங்களை இயக்கியுள்ளார்.

ஷோலே தவிர பிரம்மச்சாரி, சீதா அவுர் கீதா, அந்தாஸ் ஆகிய படங்களும் பெரும் வெற்றியைப் பெற்ற பிற படங்கள் ஆகும்.

இதுதவிர சாஸ், மேரே சனம், பந்தன், திரிஷ்னா, ஈஸாஸ், ஷான், சாகர், ராஜு பங்கயா ஜென்டில்மேன், ஹமேஷா ஆகிய படங்களும் சிப்பி தயாரித்த முக்கியப் படங்கள் ஆகும். இதில் சாகர் படத்தில் நடித்த நாயகன் ரிஷி கபூரை விட 2வது நாயகனாக நடித்த கமல்ஹாசன் வெகுவாக பாராட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெரைன் டிரைவ், சந்திரகாந்தா, ஸ்ரீமதி 420, அதில் இ ஜஹாங்கீர், லைட்ஹவுஸ், பாய் பேஹன் ஆகிய படங்களை சிப்பி இயக்கியுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil