»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலியில் நடந்த சினிமா படப்பிடிப்பு பொது மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தி விட்டது.

சமீப காலமாக முக்கியக் காட்சிகளை சினிமாக்காரர்கள் பொது மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களிலேயே எடுக்கஆரம்பித்துள்ளனர். தத்ரூபமாக காட்சி வர வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள்.

6 மாதங்களுக்கு முன் விஜயகாந்த் நடித்த ராஜ்ஜியம் படத்தின் டைட்டில் பாடல் காட்சிக்காக தமிழ்நாடு முழுவதும்சென்று பொது மக்கள் முன்னிலையில் படம் பிடித்தனர். இதனால் ஏற்பட்ட டிராபிக் ஜாமில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச் சென்ற பல மாணவ, மாணவிகள் சிக்கித் தவித்தனர். உரிய நேரத்தில் தேர்வுக்குச் செல்ல முடியாமல்பாதிக்கப்பட்டனர்.

பல இடங்களிலும் சூட்டிங் பார்க்க கூட்டம் கூடியதில் சிறிய அளவில் வன்முறைகளும் ஏற்பட்டு போலீஸ் தடியடிநடத்தும் அளவுக்குப் பிரச்சினை ஏற்பட்டது.

சாமி படத்திற்காக நெல்லையின் முக்கிய இடங்களில் விக்ரம் நடித்த சில காட்சிகள் படமாக்கப்பட்டபோதுபோக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதே போன்ற ஒரு சம்பவம் நேற்றும் நெல்லையில் நடந்தது. மக்களிடையே பெரும் பீதியைஏற்படுத்தியது.

சரத்குமார் நடித்து வரும் திவான் படத்தின் படப்பிடிப்பு நேற்று காலை நெல்லை மேம்பாலத்தில் நடத்தப்பட்டது.அரசியல்வாதி ஒருவரை பாலத்தில் ஓட ஓட விரட்டி சில ரெளடிகள் கொலை செய்வது போன்ற காட்சி அது.

இதற்காக அரசியல்வாதி வேடம் பூண்ட நடிகர் தயாராக இருக்க, ரெளடிகளாக நடித்தவர்கள் கையில் பளபளக்கும்பொய் அரிவாள்கள், அட்டைக் கத்திகளுடன் "வெட்டுவதற்குத்" தயாராகினர். கேமரா மறைவாக ஒரு லாரியில்வைக்கப்பட்டிருந்தது.

டைரக்டர் ஓ.கே. சொன்னவுடன் கண்ணில் உயிர் பயம் தெரிக்க அரசியல்வாதி ஓடினார். தொடர்ந்து ரெளடிகள்திமுதிமுவென துரத்தினர். இந்தக் காட்சியைப் பார்த்ததும் பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் சடர்ன்பிரேக் போட்டு நின்றன.

உண்மையிலேயே ரெளடிகள் தான் ஒருவரை விரட்டுகிறார்கள் என்று எண்ணிய பொது மக்கள் பீதியில் கத்தத்தொடங்கினர்.

ஒரு தனியார் பஸ் அருகே சென்று அரசியல்வாதி கீழே விழ ரெளடிகள் அட்டைக் கத்திகளால் அவரை வெட்டித்தள்ளினர். அரசியல்வாதியின் சட்டைக்குள் வைக்கப்பட்டிருந்த சிவப்பு மை கவர்கள் உடைந்து உடலெங்கும்ரத்தம் பரவியது.

இதைப் பார்த்த அந்த பஸ் பயணிகள் அதிலிருந்து இறங்கி அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

இதையடுத்து, படப்பிடிப்புக் குழுவினர் இது சினிமா ஷூட்டிங் பயப்பட வேண்டாம் என்று குரல் கொடுத்தபடி ஓடிவந்தனர்.

அப்போதுதான் அது ஷூட்டிங், நிஜ சம்பவம் அல்ல என்பதை பொதுமக்கள் உணர்ந்தனர். அடுத்த நிமிடமேகோபம் கொப்பளிக்க சூட்டிங் குழுவினரை மக்கள் திட்டித் தீர்த்தனர்.

இதையடுத்து படப்பிடிப்புக் குழுவினர் அங்கிருந்து உடனடியாக இடத்தைக் காலி செய்தனர்.

இதுபோன்ற காட்சிகளை மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில், காலை நேரத்தில் எடுக்க போலீஸார் எப்படிஅனுமதித்தார்கள் என்று தெரியவில்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil