»   »  சிவாஜி.. வருத்தத்தில் ஷ்ரேயா

சிவாஜி.. வருத்தத்தில் ஷ்ரேயா

Subscribe to Oneindia Tamil

ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்த ஸ்ரேயா மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். காரணம் என்ன தெரியுேமா படப்பிடிப்பு முடிந்துவிட்டது தான்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஒரு வருடமாக நடந்து வந்தது. இப்போதும் கூட போஸ்ட் புரொடக்சன் தொடர்பான மிச்ச சொச்ச வேலைகள் இருப்பதாலும் ரஜினி நல்ல நாள் பார்க்க சொல்லிவிட்டதாலும் படத்தின் ரிலீஸ் தேதி மாறிக் கொண்டே இருக்கிறது.

படத்தின் ரிசல்ட்டுக்காக ஏவிஎம் நிறுவனம் டென்சனுடன் நாளைக் கடத்திக் கொண்டிருக்க, மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் ரஜினி. ஷங்கரோ கடைசி கட்ட நகாசு வேலைகளில் பிஸியாக ஓடிக் கொண்டிருக்கிறார்.

இவர்கள் எல்லோரும் இப்படி இருக்க, நாயகி ஸ்ரேயாவோ ரொம்ப விசனத்தில் இருக்கிறாராம்.

ரஜினியுடன் நடித்தது சிறப்பான அனுபவமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. கல்லூரிக்கு சென்று வருவது போல் மிக ஜாலியாக இருந்தது. படப்பிடிப்பில் ரஜினி, ஷங்கர் படப்பிடிப்பு டீமுடன் இருந்ததை மறக்க முடியாது.

இவ்வளவு சீக்கிரத்தில் (என்னாது??) சூட்டிங் முடிந்து விட்டதே என வருத்தமாக உள்ளது. தமிழில் ரஜினி, தெலுங்கில் சிரஞ்சிவி என 2 சூப்பர் ஸ்டார்களுடன் நடித்துள்ளேன். இது எனக்கு பெருமையாக உள்ளது. அவர்களிடமிருந்து பல நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன்.

நடிப்பு பற்றியும் (அட, இங்க பார்றா) நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்...

என்ன செய்றது நாட்கள் ரொம்ப வேகமாக ஓடுகின்றன. நாமும் ஓட வேண்டியது என்றார் சிவாஜி காலத்தில் மூழ்கியபடி, கவலையோடு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil