»   »  ஆசின்-த்ரிஷா-ஷ்ரியா மும்முனை போட்டி

ஆசின்-த்ரிஷா-ஷ்ரியா மும்முனை போட்டி

Subscribe to Oneindia Tamil

முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட ஆசின், ஷ்ரியா, திர்ஷாஆகியோருக்கிடையே கடும் போட்டி கிளம்பியுள்ளது. ஆளாளுக்கு பார்ட்டி வைத்துநாயகர்களை வளைக்க பகீரத முயற்சிகளில் இறங்கியுள்ளனராம்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் லீடிங்கில் இருந்து வந்தவர்த்ரிஷா. அசைக்க முடியாத அளவுக்கு ஆணி அடித்தாற் போல நங்கூரமிட்டு கிடந்ததுத்ரிஷாவின் மார்க்கெட்.

ஆனால் இலியானாவின் வருகையால், த்ரிஷாவின் மார்க்கெட் தெலுங்கில் ஆட்டம்காண ஆரம்பித்தது. இதனால் தனது கவனத்தை தமிழ் பக்கம் திருப்பினார் த்ரிஷா.ஆனால் இங்கும் அவருக்கு வந்தது ஆப்பு.

ஆசின் ஒரு பக்கம் முட்டு கொடுக்க, மறுபுறம் ஷ்ரியாவின் எழுச்சி, த்ரிஷாவைபயமுறுத்தியுள்ளதாம். மழை மூலம் கோலிவுட்டில் புயலைக் கிளப்பிய ஷ்ரியாஇப்போது சூப்பர் ஸ்டாருடன் சிவாஜியில் ஜோடி போட்டுள்ளதால் அவரைத் தேடிநிறைய பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன.

சிவாஜியை முடித்து விட்டு வருகிறேன், ஜஸ்ட் வெயிட் என்று சொல்லி தன்னைத்தேடி வந்த வாய்ப்புகளையெல்லாம் வெயிட்டிங் லிஸ்ட்டில் (பெரிய அமெளண்ட்டைஅட்வான்ஸ் வாங்கிக் கொண்டு தான்) போட்டு வைத்துள்ளார் ஷ்ரியா.

ஆசின் தனது பங்குக்கு முன்னணி ஹீரோக்களை தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டு அமர்க்களப்படுத்தி வருகிறார். இருவரையும் நெட்டித் தள்ளி தன் வழியில்ஹீரோக்களை திருப்பும் முயற்சியில் குதித்துள்ளாராம் த்ரிஷா.

தன்னுடன் ஜோடி போட்டு நடித்த முன்னணி ஹீரோக்களுக்கு அட்டகாசமான பார்ட்டிவைத்து அவர்களை கபளீகரம் செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளாராம் த்ரிஷா.

இதை சமாளிக்க ஆசின் எடுத்துள்ள முயற்சிகள்தான் கோலிவுட்டின் ஹாட் பேச்சு.தான் நடிக்க விரும்பும் ஹீரோக்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினரையும்சேர்த்தே வளைத்து சமாளிப்பு வேலைகளை செய்து வருகிறாராம் ஆசின்.

ஷிரியாவைத் தேடி வாய்ப்புக்கள் ஒரு பக்கம் வந்தாலும் தானும் நேரிலும் போன்போட்டும் முக்கிய நடிகர்கள், தயாரிப்பாளர்களிடம் பேசி வாய்ப்பு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இப்படி மூன்று நாயகிகளும் போட்டி போட்டு வாய்ப்புகளை அள்ளி வரும் நிலையில்மறுபுறம் நயனதாரா சத்தமே போடாமல் தெலுங்கில் தனது கவனத்தைக் காட்டிவருகிறார்.

பெரிசு, சிறுசு என்று நடிகர்களின் வயதைப் பார்க்காமல் சம்பளத்தை மட்டும் பெரியஅளவில் வைத்துக் கொண்டு யாராக இருந்தாலும் நடிக்க ஒப்புக் கொண்டுவிடுகிறார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil