»   »  ஷ்ரியாவின் 'வடிவேலு புராணம்'!

ஷ்ரியாவின் 'வடிவேலு புராணம்'!

Subscribe to Oneindia Tamil
Click here for more images

ரஜினி புராணம் பாடி வந்த ஷ்ரியா இப்போது வடிவேலு புராணத்திற்கு மாறி விட்டார். இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் சிங்கிள் பாட்டுக்கு வடிவேலுவுடன் ஆடிய அனுபவத்தால் வடிவேலுவின் தீவிர ரசிகையாகி விட்டாராம் ஷ்ரியா.

சூப்பர் ஸ்டார் முதல் இளைய தளபதி வரை முன்னணி ஸ்டார்களுடன் இணைந்து அசத்தி வரும் ஷ்ரியா, காமெடிப் புயல் வடிவேலுவுடன் ஒத்தப் பாட்டுக்கு ஆடுகிறார். இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில்தான் இந்த சிங்கிள் ஆட்டம்.

நெல்லை பக்கம் தென்காசி, குற்றாலம், சுந்தரபாண்டிய புரம் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் முகாமிட்டு கலக்கலாக இந்தப் பாட்டை படமாக்கியுள்ளார் இயக்குநர் தம்பி ராமையா.

''மல்லிகா ஷெராவத்தா, மர்லின் மன்ரோவா
கிளியோபாட்ராவா, அந்த கிளிண்டன் மகளா...'' என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலுக்கு வடிவேலு தனது பாணியில் தத்தளிக்க, ஷ்ரியா தனது ஸ்டைலில் சிலிர்க்க வைக்கும் ஆட்டத்தைப் போட்டுள்ளார்.

இந்தப் பாட்டை படமாக்கியபோது பெரும் திரளான ரசிகர்கள் கூடி வந்து குஷியோடு பாட்டையும், ஆட்டத்தையும் கண்டு களித்தனர்.

வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு ஆடிய ஷ்ரியா இப்ேபாது வடிவேலுவின் தீவிர ரசிகையாகி விட்டாராம். யாரைப் பார்த்தாலும் வடிவேலு புராணம் பாடி வருகிறார்.

வடிவேலுவுடன் தான் ஆடிய சிங்கிள் ஆட்டம் குறித்து ஷ்ரியா கூறுகையில், என்னைப் பார்க்க வந்த கூட்டத்தை விட வடிவேலு சாரைப் பார்க்கத்தான் பெரும் கூட்டம் கூடியது. இதைப் பார்த்து நான் அசந்து போய் விட்டேன்.

பாட்டின் இடை இடையே வடிவேலு சார் குரல் கொடுப்பார். அதைக் கேட்டு கேட்டு எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. இதனால் அந்தக் காட்சியை பல டேக்குகள் எடுக்க வேண்டியதாகி விட்டது.

வடிவேலு சாருக்கு நல்ல சென்ஸ் ஆப் ஹ்யூமர். அவர் நடித்த காமெடிக் காட்சிகளை இப்போது விழுந்து விழுந்து பார்க்கிறேன். டிவியில் நான் பார்க்கும் காமெடிக் காட்சிகள் பெரும்பாலும் வடிவேலு நடித்த காட்சிகளாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு அவரது ரசிகையாகி விட்டேன் என்றார் ஷ்ரியா.

விட்டால் மன்றம் ஆரம்பித்து கொடியை கட்டி விடுவார் போலிருக்கேய்யா!

Read more about: rajini, shriya, vadivelu
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil