»   »  ஷ்ரியாவின் ஸாரி!

ஷ்ரியாவின் ஸாரி!

Subscribe to Oneindia Tamil
Vadivelu with Shriya
அஜீத், சூர்யா, சிம்புவுடன் நடிக்க வந்த வாய்ப்புகளை வேண்டாம் என்று கூறி விட்டாராம் சிவாஜி நாயகி ஷ்ரியா.

மழை படத்தால் தமிழிலும் ஹிட் ஆன ஷ்ரியாவுக்கு பெரிய பிரேக் கொடுத்த படம் சிவாஜி. சூப்பர் ஸ்டாருடன் நடித்த காரணத்தால் ஷ்ரியாவைத் தேடி பல படங்கள் பாய்ந்தோடி வந்தன.

சிவாஜியுடன் ஜோடி போட்ட சூட்டோடு விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் படத்தில் திறமை காட்டினார். அதே வேகத்தில் விக்ரமுடன் கந்தசாமியிலும் ஜோடி சேர்ந்தார். இடையில் வடிவேலுவுடன் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டமும் ஆடினார்.

இந்த நிலையில் தன்னைத் தேடி வந்த 3 முன்னணி ஹீரோக்களின் படங்களை வேண்டாம் என்று கூறியுள்ளாராம் ஷ்ரியா.

ராஜு சுந்தரம் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம், ஏவி.எம். நிறுவனம் தயாரிக்க சூர்யா நடிக்கும் படம் மற்றும் சிம்புவின் சிலம்பாட்டம் ஆகிய படங்களைத்தான் ஷ்ரியா நிராகரித்துள்ளாராம்.

ஏனுங்கம்மணி, என்னாச்சு ஒங்களுக்கு என்று ஷ்ரியாவிடம் இந்த நிராகரிப்பு குறித்து கேட்டால், ஜெஸ்ஸி மெட்கால்ப்புடன் இணைந்து 'The other end of the line' என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளேன். இதற்கு கால்ஷீட் கொடுத்து விட்டதால் தமிழ்ப் படங்களுக்கு கால்ஷீட் தர இயலாத நிலை என்று காரணம் கூறுகிறார் ஷ்ரியா.

ஷ்ரியா தற்போது இந்தியில் 3 படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர ஹாலிவுட் படமும் கையில் இருக்கிறது. தமிழில் விக்ரமுடன் கந்தசாமி உள்பட 3 படங்கள் கையில் உள்ளதாம்.

Read more about: shriya
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil