For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஸ்பெஷல்ஸ்

  By Staff
  |

  பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஜெயம் ரவியும் தெலுங்கு நடிகை ஷ்ரியாவும் ஜோடிசேருகின்றனர்.

  தனது மகன் சரணை நடிகனாக்கவும் பெரிய அளவில் பின்னணிப் பாடகராக்கவும் முயன்ற எஸ்.பி.பிக்கு அதில் பெரும் வெற்றி ஏதும்கிடைக்கவில்லை. இதனால் அவரைத் தயாரிப்புத்துறையில் இறக்கிவிட்டுவிட்டார்.

  கேபிட்டல் சினிமா என்ற புதிய பட நிறுவனத்தை மகனுக்குத் துவக்கித் தந்துள்ளார் எஸ்.பி.பி. இதன்மூலம் சரண் தயாரிக்கும் முதல் படம்மழை.

  ஜெயம், எம்.குமரன்-சன் ஆப் மகாலட்சுமி ஆகிய படங்களின் மூலம் தமிழில் மிகச் சிறந்த இடத்தைப் பிடித்துவிட்ட ரவி தான் ஹீரோ. இதில்ஹீரோயினாக தனது சொந்த ஊரான ஆந்திராவில் இருந்து ஷ்ரியாவைக் கூட்டி வந்துள்ளார் எஸ்.பி.பி.

  தெலுங்கில் வெளிவந்து மிக வெற்றிகரமாக ஓடிய வர்ஷம் படத்தின் கதையை வாங்கித் தான் தமிழில் தயாரிக்கிறார்கள். (தெலுங்கில்த்ரிஷா மழைக் காட்சிகளில் காட்டிய தாராளம் ரொம்பவே பேசப்பட்டது. அந்த வேலையை தமிழில் ஷ்ரியா கச்சிதமாக செய்யப்போகிறார்).

  படத்தின் பெரும்பகுதியை மழையில் எடுக்கப் போகிறார்களாம். இதனால் பெரும்பாலும் செட்களில் தான் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

  பண விஷயத்தில் எஸ்.பி.பி. தாராளம் காட்டிவிட்டதால் மிகப் பிரமாண்டமான பொருட் செலவில் இதைத் தயாரிக்கிறார் சரண்.கோலிவுட்டின் முன்னணி சினிமாட்டோகிராபர்களில் ஒருவரான ராஜேஷ் யாதவ் தான் கேமராவை கவனிக்கப் போகிறார்.

  படம் ஆக்ஷன் கலந்த காதல் கதையாம். கொஞ்சம் காக்க..காக்க.. மாதிரியும் இருக்கும் என்று தெரிகிறது.


  தெலுங்கில் முன்னணி நடிகையான ஷ்ரியா தமிழில் உனக்கு 18 எனக்கு 20 படத்தில் த்ரிஷாவுக்கு இணையாக இன்னொரு ஹீரோயினாகநடித்தார். ஆனால், படம் ஓடாததால் தமிழில் வாய்ப்புக்கள் வரவில்லை. இதனால் திரும்பி ஊரப் பக்கமே போனவருக்கு மழை மூலம்இரண்டாம் முறையாக தமிழில் எண்ட்ரி கிடைத்திருக்கிறது.

  படத்தை இயக்கப் போவது ராஜ்குமார். கதை, வசனமும் இவரே. இயக்குனர்கள் வஸந்த் மற்றும் சரணிடம் உதவியாளராக இருந்தவர்.

  அம்பிகா, வடிவேலு, கலாபவன் மணி ஆகியோரும் நடிக்கும் இந்தப் படத்துக்கு இசை தேவி வரபிரசாத். தெலுங்கு சினிமாவிலும்ஆல்பங்களிலும் மிகப் பிரபலமானவர். பாடல்களை எழுதப் போவது எஸ்.பி.பிக்கு மிகப் பிடித்த கவியரசு வைரமுத்து.

  ஆக்ஷன் கலந்த மியூசிக்கல் த்ரில்லராக வெளிவரப் போகும் இந்தப் படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை கோ-ஆர்டினேட் செய்யப் போவதுபீட்டர் ஹெய்ன். தென் இந்தியாவின் மிகப் பிஸியான ஸ்டண்ட் மாஸ்டர்.

  சில நாட்களுக்கு முன் சென்னையில் கோலாகலமான பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக குஷ்புவும்கலந்து கொண்டு விழாவை கலர்புல் ஆக்கினார்.

  படப்பிடிப்பு அம்பாசமுத்திரம், குற்றாலம், ஹைதராபாத், வாரங்கல் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. அதே நேரத்தில் சென்னையில்பிரமாண்டமான செட்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. மழைக் காட்சிகளை எல்லாம் இங்கு தான் எடுக்கப் போகிறார்கள்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X