»   »  சோட்டா பாவனா-சிபி!

சோட்டா பாவனா-சிபி!

Subscribe to Oneindia Tamil

மலையாளத்தில் ஹிட் ஆகியுள்ள சோட்டா மும்பை படத்தின் தமிழ் ரீமேக்கில் சிபி ராஜ் நடிக்கவுள்ளார்.

மோகன்லால், பாவனா நடிப்பில் சோட்டா மும்பை வெளியாகியுள்ளது. இதில் பாவனா ஆட்டோ டிரைவராக அசத்தலாக நடித்துள்ளார். இப்படம் மலையாளத்தில் ஹிட் ஆகியுள்ளது.

இத்தகவல் கோலிவுட்டில் பரவியவுடன் முன்னணி நடிகர்களுக்கு படத்தைப் பார்க்கும் ஆர்வம் கிளம்பி விட்டது. விஜய்யும், சிபியும் சில நாட்களுக்கு முன்பு தனித் தனியாக இப்படத்தைப் பார்த்துள்ளனர்.

சிபிக்குப் படம் பிடித்துப் போக உடனேயே ரீமேக் உரிமையை வாங்க களத்தில் குதித்து விட்டார். அத்தோடு நில்லாமல் படத்தின் உரிமையையும் வாங்கி விட்டார்.

சூட்டோடு சூடாக, தனக்குப் பிரேக் கொடுத்த லீ படத்தின் இயக்குநர் பிரபு சாலமன் மற்றும் செல்வாவிடம் ஆலோசனையும் நடத்தியுள்ளார்.

இவர்களில் ஒருவர் சோட்டா மும்பையின் ரீமேக்கை இயக்குவர் எனத் தெரிகிறது. இன்னும் ஒரு வாரத்தில் படம் குறித்த அறிவிப்பும் வெளியாகுமாம்.

சோட்டா மும்பையில் நடித்த பாவனாவையே தமிழ் ரீமேக்கிலும் ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். அவரிடம் இதுகுறித்துப் பேசியுள்ளனர். அவரும் ஓ.கே. சொல்லி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil