»   »  சிம்பு தியேட்டரில் தனுஷ்!

சிம்பு தியேட்டரில் தனுஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எதிரும், புதிருமாக இருப்பதாக கூறப்படும் தனுஷும், சிம்புவும் நிஜ வாழ்க்கையில் படு பிராக்டிகலாகத்தான் உள்ளனர்.

ரஜினி, கமல், விஜய், அஜீத் வரிசையில் தங்களையும் தாங்களாகவே சேர்த்துக் கொண்டவர் தனுஷும், சிம்புவும். இருவருக்கும்தான் கடும் போட்டி என்பது போல ஒரு செயற்கை இமேஜை உருவாக்கிக் கொண்டு இருவரும் கடுமையாக மோதிக் கண்டனர் படங்கள் மூலமாக.

நிஜத்திலும் கூட இருவரும் சரிவர பேசிக் கொள்வதில்லை. நேருக்கு நேர் பார்த்தாலும் கூட வேறு வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டதையும் சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் கண்டது.

ஆனால் தனுஷ் படத்தை வைத்து சிம்பு இப்போது லாபம் பார்த்து வருகிறார். வேலூர், திருப்பத்தூர் சாலையில் உள்ள இரு தியேட்டர்கள் அடங்கிய வேலு திரையரங்க வளாகத்தை சில மாதங்களுக்கு முன்பு டி.ராஜேந்தர் விலைக்கு வாங்கினார். அந்த வளாகத்திற்கு டி.ஆர்.சினி காம்ப்ளக்ஸ் எனவும் பெயர் சூட்டினார்.

அங்கு ஆனந்தா, ஜோதி என இரு தியேட்டர்கள் உள்ளன. நவீனமாக அவற்றைப் புதுப்பித்து ஒரு தியேட்டருக்கு சிம்பு எனவும், இன்னொரு தியேட்டருக்கு குறள் (இளைய மகன் குறளரசன் பெயர்) எனவும் பெயர் சூட்டினார்.

இந்த இரு தியேட்டர்களில் ஒன்றில் தனுஷ் நடித்த பரட்டை என்கிற அழகுசுந்தரம் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் சரியாக இல்லை என்றபோதிலும், வசூல் வரவில்லை என்ற போதிலும் கூட படத்தை 30 நாட்களுக்கும் மேலாக இழுத்துப் பிடித்து ஓட்டிக் கொண்டிருக்கிறார் சிம்பு (நட்புக்கு மரியாதை!)

இந்தத் தியேட்டரில் சிம்பு நடித்த வல்லவன் படத்தைத்தான் முதலில் திரையிட்டனர். படம் 100 நாட்கள் ஓடியது.

சிம்பு தியேட்டரில் தனுஷ்! வெரிகுட்!!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil