»   »  சிம்புவும், சிம்ரன் கானும்!

சிம்புவும், சிம்ரன் கானும்!

Subscribe to Oneindia Tamil

சிம்ரன் கான் என்ற பெயரில் ஒரு கிளாமர் சில்வண்டு கோலிவுட்டுக்குள் நுழைந்து, கவர்ச்சி ரீங்காராமிட ஆரம்பித்திருக்கிறது.

சிலிர்க்க வைக்கிறார் சிம்ரன் கான். பிறந்தது மும்பையில், புயலைக் கிளப்பிக் கொண்டிருப்பது ஆந்திராவில், இப்போது இடம் பெயர்ந்திருப்பது சென்னையில்.

திகுதிகுவென இருக்கிறார் சிம்ரன் கான். ஐட்டம் பாட்டுக்கு ஆடக் கூடியவர்களுக்கு என்ன மாதிரியான தகுதிகள் இருக்க வேண்டுமோ அத்தனையும் அபரிமிதமாகவே இருக்கிறது சிம்ரனிடம்.

அழகுப் புயலாய், ஆட்டத்தில் சூறாவளியாய் ஆந்திர ரசிகர்களை ஆர்ப்பரிப்போடு அமர்க்களப்படுத்தி வரும் சிம்ரனைப் பற்றிக் கேள்விப்பட்ட இயக்குநர் டி.பி.கஜேந்திரன் உடனே ஹைதராபாத் போய், சிம்ரனை நேரில் சந்தித்து, ஸ்டூலைப் போட்டு ஏறி நின்று சிம்ரனிடம் ரேட் பேசி சென்னைக்குக் கூட்டி வந்து விட்டார். அவரது சீனா தானா 001 படத்தில் செமையான ஒரு ஆட்டம் போட்டுள்ளாராம் சிம்ரன்.

இப்படியாப்பட்ட சில்மிஷ நாயகி குறித்து சிம்புவின் காதுக்கும் செய்தி பரவியது. காண வேண்டுமே அந்த சுந்தரியை என்று காலில் ரெக்கை கட்டிக் கொண்டு ஏவி.எம். ஸ்டுடியோவுக்குப் பறந்தார்.

சிம்ரனின் ஆட்டத்தைப் பார்த்து மெய் மறந்த சிம்பு, இயக்குநர் கஜேந்திரனை அணுகி, கொஞ்ச நேரம் சிம்ரனிடம் தனியாகப் பேச வேண்டுமே, ப்ளீஸ் என்று பெர்மிஷன் கேட்டுள்ளார்.

கஜேந்திரன் ஓ.கே. சொன்னவுடன், சிம்ரனை தனியாகக் கூட்டிக் கொண்டு போனார் சிம்பு. கிட்டத்தட்ட அரை மணி நேரம் இருவரும் கேரவன் வேனுக்குள் அமர்ந்து சீரியஸாக டிஸ்கஸ் செய்தனர். பேச்சு முடிந்து வெளியே வந்தபோது, சிம்ரன் வாய் ரொம்பப் பெரிதாக இருந்தது - புன்னகையால்.

காளை படத்தில் சிம்ரனுக்கு ஒரு ரோல் கொடுத்துள்ளாராம் சிம்பு. அத்தோடு ஒரு குத்துப் பாட்டுக்கும் சிம்புவோடு ஆடப் போகிறாராம்.

கடவுள் ரொம்ப நல்லவர். ஒரு கதவு மூடினால், இன்னொரு கதவு திறக்கும் என்பது போல அந்த சிம்ரனை அனுப்பி வைத்து விட்டு இந்த சிம்ரனை தமிழ்க் குடிமக்களுக்காக கொடுத்துள்ளாரே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil