»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தொட்டி ஜெயா என்ற படத்தில் கோபிகாவுடன் இணைந்து நடிக்கிறார் சிம்பு.

தனுசுக்கு ஏற்பட்டிருக்கும் தேக்கத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் சிம்பு. தந்தையின்வீராச்சாமி படத்தில் நடிக்க மறுத்தவர், தனது சொந்தக் கதை-திரைக்கதையில் தயாராகி வரும் மன்மதன் படத்தை பார்த்துப்பார்த்து மெருகேற்றி வருகிறார்.

மன்மதன் படம் கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில், அடுத்த படத்துக்காக ஏறத்தாழ முப்பதுக்கும் மேற்பட்ட கதைகள்கேட்டாராம். இறுதியில் அவர் சம்மதித்த படம் தான் தொட்டி ஜெயா.

காக்க காக்க படத்தின் வெற்றியால் நிமிர்ந்திருக்கும் கலைப்புலி தாணு தயாரிக்கும் படம் இது. அஜீத்குமார் நடித்த முகவரி என்றவெற்றிப்படத்தை இயக்கிய துரைதான் இந்தப் படத்தின் இயக்குநர். படத்தில் சிம்புவுடன் டூயட் பாடப் போகிறவர் கோபிகா.

சென்னை மோகன் ஸ்டூடியோவில் படத்தின் டிரெயலர் சூட்டிங் நடந்தது. இதில் கலந்து கொள்ள மன்மதன் படத்துக்காக மும்பைபோயிருந்த சிம்பு சென்னை வந்தார். காலை 7.30 மணிக்கு வந்தவர் சூட்டிங் முடிந்ததும் மறுபடியும் மும்பை போய்விட்டாராம்.

டிரெயிலரைப் பார்த்த தாணு அசந்து போய், ஹூண்டாய்-அஸெண்ட் காரை வாங்கி இயக்குநர் துரைக்கு பரிசளித்திருக்கிறார்.முகவரி படம் வெற்றி பெற்றதும், துரைக்கு அஜீத் ஒரு ஹூண்டாய் சாண்ட்ரா காரைப் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.

குஷியில் இருக்கும் துரையைச் சந்தித்து படத்தைப் பற்றி கேட்டால் ஒரு குண்டைத் தூக்கி போட்டார். படத்தில் சிம்புவுக்குமொத்தம் ஆறே ஆறு டயலாக்குகள் மட்டும்தானாம். முதல்பாதியில் இரண்டு, இரண்டாம் பாதியில் நான்கு.

இரண்டாவது படத்திலேயே ரிஸ்க் எடுக்கிறீர்கள் போல்த் தெரிகிறது என்று கேட்டால் புன்னகைக்கிறார். அவர் கூறுகையில்,இஷ்டப்படி தன்னை மாற்றிக் கொண்டு திரிபவர் சிம்பு. தனக்கு என்று யாரும் இல்லாமல் தானே வாழ்க்கையைத் தேடி தெரிந்துகொள்ளும் கேரக்டர். படத்தில் ரொமான்சுக்குப் பஞ்சமில்லை. வித்தியாசமான கதை என்பதால் நிச்சயம் ஜெயிக்கும் என்கிறார்நம்பிக்கையுடன்.

பத்து நாட்கள் ரயிலேயே சூட்டிங் நடத்தவிருக்கிறார்கள். மன்மதன் பாடல்கள் கேசட் விற்பனையில் தூள் பறத்திக்கொண்டிருப்பதால், இந்தப் படத்திற்கும் யுவன்சங்கர் ராஜா தான் மியூசிக் போட வேண்டும் என்பதில் சிம்பு பிடிவாதமாகஇருந்தாராம். அதன்படியே யுவன்சங்கர் ராஜா புக் செய்யப்பட்டுள்ளார்.

ஆட்டோகிராஃப் படத்துக்குப் பிறகு தமிழில் நேரடிப் படங்கள் எதுவும் வராத நிலையில், கோபிகா இந்தப் படத்தில் நடிக்கிறார்.நல்ல டீம் என்பதால் கோபிகாவும் உற்சாகமாக இருக்கிறார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil