»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil
சிம்புவின் மன்மதன் ஹாலிவுட்டுக்குப்போகிறது. ஹாலிவுட்டின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான டுவன்டியத் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்துசாட்சாத் சிம்புவே ஆங்கிலத்திலும் இப் படத்தைத் தயாரிக்கவுள்ளார்.

பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் படத்தின் தழுவலான (வேறு மாதிரியான பின்னணியுடன்) சிம்புவின் கதை, திரைக்கதை மற்றும் மறைமுஇயக்கத்தில் உருவான மன்மதன் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் ஆகிவிட்டது.

இப்போது இந்தப் படத்தை ஆங்கிலத்தில் தயாரிக்கப் போகிறார்களாம். டுவன்டியத் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனமும் டி.ஆரின் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில்சிம்புவும் இணைந்தே இந்தப் படத்தை ஆங்கிலத்தில் கொண்டு வரப் போகிறார்களாம்.

சிம்புவின் வேடத்தில் நடிக்கப் போவது யார் தெரியுமா? டைட்டானிக், ஏவியேட்டர் பட நாயகன் லியனார்டோ டி காப்ரியோ என்கிறார்கள். இரட்டைவேடத்தில் அவர் நடிக்கவுள்ள முதல் படம் இதுவாகும்.

இதற்கான பூர்வாங்கப் பேச்சுகள் முடிவடைந்து விட்டதாம். எந்த நேரமும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.

இப்போது லண்டனில் இருக்கும் சிம்பு இந்தப் படத் தயாரிப்பு தொடர்பாக ஹாலிவுட் ஆட்களுடன் அங்கு வைத்து பேச்சு நடத்தி வருகிறார்.

இப்படித்தான் காக்க.. காக்கவை ஆங்கிலத்தில் கலைப்புலி எஸ்.தாணு எடுக்கப் போகிறார் என்றார்கள். செசன்யா தீவிரவாதிளை பின்னணியாகக் கொண்டுஇந்தப் படம் எடுக்கப்படும் என்று பரபரத்தது கோலிவுட்.

தாணுவும் காக்க..காக்க இயக்குனர் கெளதமும் ஹாலிவுட்டுக்கும் போய் சில நிறுவனங்களுடன் பேச்சு நடத்திவிட்டு வந்தார்கள். இதற்காக தனியார் ஒருபட நிறுவனத்தையும் தாணு தொடங்கினார். ஆனால், அதன் பின்னர் மூச்சு பேச்சே காணோம்.

சிம்பு விஷயத்தில் ஹாலிவுட் கனவு உண்மையாகுமா.. அல்லது ஆரம்பத்திலேயே கவுந்துவிடுமா என்று தெரியவில்லை.

மன்மதனைவிட பக்காவான த்ரில்லர் எல்லாம் ஹாலிவுட்டில் ஏற்கனவே வந்தது தானே... இருந்தாலும் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்துபார்ப்போம்...

தமிழில் மன்மதனைத் தொடர்ந்து தொட்டி ஜெயாவில் கவனம் செலுத்தி வரும் சிம்பு, வல்லவன் என்ற ஒரு படத்தில் 3 ரோல்களில் நடிக்கவுள்ளாராம்.இதில் சிம்புவுக்கு மூன்று ஜோடிகள்.

ஒருவர் காதல் சந்தியா, இன்னொருவர் ரீமா சென், இன்னொருவர் நயனதாரா !.

ரீமாவும் நயனதாராவும் இதுவரை மூத்தகுடிகளுடன் மட்டுமே நடித்தனர். சிம்பு மாதிரியான பொடிப்பையனுடன் நடிப்பது இதுவே முதன்முறை.

அதே போல தனுஷ் நடிக்க இருந்த ஒரு படம் அப்படியே அலேக் ஆக சிம்புவின் மடி.யில் லேண்ட் ஆகியிருக்கிறது. தெலுங்கில் மிக வெற்றிகரமாக ஓடியஆர்யா என்ற படத்தை யுவன் என்ற பெயரில் ரீ-மேக் செய்கிறார்கள்.

முதலில் தனுஷ் நடிப்பதாய் இருந்தது, ஆனால் மன்மதன் வெற்றியால் சிம்புவை நோக்கி பாய்ந்து வந்துவிட்டது யுவன்.

யுவனுக்கு முன் பி.எப் சூர்யாவின் இயக்கத்தில் ஏசி என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கப் போகிறார் சிம்பு. இதில் சிம்புவுக்கு ஜோடி ஆஷின்.

சிம்புவின் திறமை மீது அதீத மரியாதை வைத்துள்ள சூர்யா, தனது பி.எப். சூட்டிங் ஸ்பாட்டுக்கு சிம்புவை அடிக்கடி வரவழைத்துவிடுகிறார். சில காட்சிகளை சிம்புயோசனைப்படி சூட் செய்திருக்கிறாராம் சூர்யா.

Read more about: direction, manmadhan, simbu
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil