»   »  அண்ணி ஆனார் சிம்ரன்!

அண்ணி ஆனார் சிம்ரன்!

Subscribe to Oneindia Tamil

முன்னாள் கனவுக் கன்னி, பிடியிடை அழகி சிம்ரன் தமிழில் இரண்டாவது ரவுண்டுக்கு ரெடியாகி விட்டார். ஆனால் இம்முறை அவர் ஜோடி போடப் போவது முன்னாள் ஹீரோவான பாக்யராஜுடன்.

கொஞ்ச காலம் முன்பு வரை தமிழ் ரசிகர்களை தனது துடி இடையாலும், மின்னல் நடனத்தாலும், பின்னும் நடிப்பாலும் கிறங்கடித்தவர் சிம்ரன். திடீரென கல்யாணம் செய்து கொண்டு டெல்லிக்குப் போய் செட்டிலான பின்னர் சிம்ரனை கிட்டத்தட்ட ரசிகர்கள் மறந்து விட்டு திரிஷா, ஆசின், நயனதாரா என செட்டிலாகி விட்டனர்.

கல்யாணம் செய்து, சூட்டோடு சூடாக குழந்தையையும் பெற்றுக் கொண்ட சிம்ரன் மீண்டும் சினிமாவில் நுழைய முயற்சித்தார். அத்தோடு தனது கணவருக்கும் வாய்ப்பு கேட்டார். இதனால் தயாரிப்பாளர்கள் பின் வாங்கினர்.

இடையில், அரசியல் பக்கமும் தனது பார்வையைத் திருப்பினார். அதுவும் கை கொடுக்கவில்லை. இதனால் ஊரைப் பார்த்துத் திரும்பி விட்டார் சிம்ரன். இருந்தாலும் விளம்பரங்கள் மூலம் தமிழ் மக்களை சந்தித்துக் கொண்டுதான் இருந்தார்.

இந்த நிலையில் சிம்ரனுக்கு தமிழ் வாய்ப்பு வந்துள்ளது. பாக்யராஜிடம் உதவியாளராக இருந்த கவி காளிதாஸ் (உன்னைக் கொடு என்னைத் தருவேன் படத்தை இயக்கியவர்) ஜித்தன் ரமேஷை வைத்து புதுப் படம் இயக்கவுள்ளார்.

இதில்தான் சிம்ரன் ரீ என்ட்ரி கொடுக்கிறார். இதில் பாக்யராஜின் ஜோடியாக நடிக்கவுள்ளார் சிம்ரன். இதில் பாக்யராஜுக்கும், சிம்ரனுக்கும் முக்கிய வேடங்களாம். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இதுகுறித்து கவி காளிதாஸிடம் கேட்டபோது, ரமேஷின் அண்ணனாக நடிக்கிறார் பாக்யராஜ். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்ரன் இதில் பாக்யராஜின் ஜோடியாக நடிக்கிறார் (அதாவது ரமேஷின் அண்ணியாக!).

அண்ணி வேடம் என்றாலும் கூட ஹீரோயினுக்கு சற்றும் குறைச்சல் இல்லாமல் சிம்ரனுக்கும் கேரக்டர் வைத்துள்ளேன்.

எனக்காக படத்தின் திரைக்கதையை எழுத பாக்யராஜ் சார் ஒத்துக் கொண்டுள்ளார். இதனால் இப்போதே படம் பாதி வெற்றி பெற்று விட்டது எனலாம் என்றார்.

இந்தப் படம் தவிர தெலுங்கிலும் ஒரு படத்தை சிம்ரன் ஒத்துக் கொண்டுள்ளார். அதில் இளம் ஹீரோ மகேஷ் பாபுவின் பாட்டியாக நடிக்கிறாராம்.

அண்ணி, பாட்டி, அடுத்து அம்மாவா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil