»   »  சிம்ரன்.. மறுபடியும் நாயகி

சிம்ரன்.. மறுபடியும் நாயகி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கல்யாணமாகி குழந்தை பெற்று மறு வரவுக்காக படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் சிம்ரனுக்கு மலையாளத் திரையுலகம் கை கொடுத்து நாயகி வாய்ப்பையும் தூக்கிக் கொடுத்துள்ளது.

ஜிலீர் நடனத்தாலும், சூப்பர் நடிப்பாலும் அசத்தியவர் சிம்ரன். திடீர் என கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்ட அவர் குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் நடிக்க சென்னைக்கு ஓடி வந்தார்.

கஷ்டப்பட்டு உடலை மறுபடியும் ஸ்லிம் ஆக்கிக் கொண்டு திரும்பிய அவருக்கு வாய்ப்புகள்தான் திருப்திகரமாக வரவில்லை. அக்கா, அண்ணி ரோலுக்குத்தான் பலரும் கூப்பிட்டார்கள். ஆனால் நடித்தால் நாயகியாக நடிப்பது என்ற முடிவில் சிம்ரன் தீவிரமாக இருந்ததால் அவரது 2வது இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் வழியைக் காணோம்.

இப்படியே இருந்தால் சரிப்பட்டு வராது என்பதால் இப்போது பாக்யராஜுடன் ஜோடி போட்டு நடிக்க ஒத்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில் மலையாளப் படவுலகம் சிம்ரனுக்கு கை கொடுத்து நாயகி வாய்ப்பைக் கொடுத்துள்ளதாம்.

கடைசியாக 1997ம் ஆண்டு மலையாளப் படத்தில் நடித்தார் சிம்ரன். மம்முட்டியுடன் இந்திரப் பிரஸ்தம் என்ற படத்தில் நடித்திருந்தார் சிம்ரன். அப்படம் சூப்பர் ஹிட். அதன் பின்னர் தமிழில் சூப்பர் ஹிட் நடிகையாகி விட்டதால் மலையாளப் பக்கம் திரும்ப நேரம் கிடைக்கவில்லை சிம்ரனுக்கு.

இந்த நிலையில் தற்போது பெரிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் மலையாளத்துக்குத் திரும்புகிறார் சிம்ரன். ஹார்ட் பீட்ஸ் என சிம்ரன் நடிக்கும் படத்துக்குப் பெயர் வைத்துள்ளனராம்.

படத்தில் சிம்ரனுக்கு ஜோடி இருவராம். மணிகுட்டன், இந்திரஜித் ஆகியோரே அவர்கள். சிம்ரனின் கேரக்டருக்குப் பெயர் தங்கம். வினு ஆனந்த் படத்தை இயக்குகிறார்.

இப்படம் வெற்றி பெற்றால் அதை வைத்து தமிழிலும் நாயகி வாய்ப்புக்கான வேட்டையைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளாராம் சிம்ரன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil