»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்ரன் எப்போதுமே ஏதாவது ஒரு செய்தியில் அடிபட்டு லைம் லைட்டில் இருந்து கொண்டே தான் இருக்கிறார்.

சிம்ரனிடம் திட்டு வாங்கிய சூர்யா:

சிம்ரனிடம் அதிகப்படியாக உரிமை எடுத்துக் கொண்ட டைரக்டர் சூர்யா நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டாராம்.

நியூ என்ற படத்தில் சிம்ரனுடன் ஜோடியாக சூர்யா நடித்து வருவது தெரிந்ததே! அதில் சூர்யாவின் கேரக்டர் சிறுவனின் மன நிலையில் உள்ள இளைஞனின் கதை.

கதைப்படி சிறுவனின் மனநிலையில் உள்ள சூர்யா, சிம்ரனைத் தொட்டுக் கொண்டும், மடியில் உட்கார்ந்தும், கன்னத்தைக் கிள்ளியும், இன்னும் சிலபலசில்மிஷங்கள் செய்தவாறும் இருப்பது போல கதை செல்கிறது.

ஷூட்டிங்கின்போது சிம்ஸை தொட்டும், அடித்தும், கட்டிப்பிடித்தும், கிள்ளியும் நடிப்பதைப் பார்க்கும் செட் ஆட்களே நெளிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

முதலில் இதைக் கண்டுகொள்ளாமல் இருந்த சிம்ஸுக்கு நாளுக்கு நாள் சூர்யாவின் இம்சை தாங்க முடியாமல் போய் விட்டதால் சூர்யாவை தனியே கூப்பிட்டுடோஸ் விட்டதாகத் தகவல்.

ரொம்ப ஓவராக நடிக்க வேண்டாம். இப்படியே தொடர்ந்தால், கதையை மாற்றி விடுங்கள் அல்லது என்னை மாற்றி விடுங்கள் என்றுகூறிவிட்டாராம் சிம்ரன்.

முதலில் லிப்-டு-லிப் முத்தம் கொடுத்த சிம்ரன் இப்போது அதே வாய் மூலம் சூர்யாவை சுட்டிருக்கிறார்.

இவரை புரிஞ்சுக்கவே முடியலை என்று புலம்பி வருகிறார் சூர்யா.

திரையுலகிடம் திட்டு வாங்கும் சிம்ரன்:

திரைப்பட நடிகர்கள் சின்னத் திரைக்கு பேட்டி தரக் கூடாது. தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் சிறப்பு நிகழ்ச்சிகளைதொகுத்துத் தரக் கூடாது என்ற தடையைத் (தொடர்களில் நடிக்க, நிகழ்ச்சிகள் நடத்த தடையில்லை,) தூக்கி குப்பையில்போட்டுவிட்டு ஸ்டார் விஜய் டிவியில் தீபாவளியன்று தோன்றினார் சிம்ரன். இதற்கு பெரும் பணத்தை வாங்கியுள்ளார் சிம்ரன்.

தீபாவளியன்று விஜய் டிவியின் நிகழ்ச்சிகளை முழுவதுமாக தொகுத்துத் தந்தார். அவருடன் இரு சின்னத்திரை நடிகர்களும்பங்கேற்றனர்,

தடையை மீறி டிவியில் தோன்றிய சிம்ரன் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்த் திரைப்படக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.இதனை அதன் தலைவரான ஸ்டீவன் ராஜ் தெரிவித்துள்ளார்.

சிம்ரனுக்கு பைன் போடலாமா அல்லது தடை விதிக்கலாமா என்று இந்த அமைப்பு ஆலோசித்து வருகிறது.

ஆனால், இதை சிம்ரன் சீரியஸாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. முக்கிய நடிகர்கள், டைரக்டர்களை எளிதில் மடக்கத்தெரிந்த சிம்ரன் நீங்கள் தடை போட்டா எனக்கென்ன என்கிற மாதிரி இருக்கிறார்.

எனக்கு அதிக பாப்புலாரிட்டி கிடைக்கும்னு தான் டிவிக்குப் போனேன் என்கிறார்.

ஆனால், சிம்ரனின் இந்தப் பேச்சுக்கு குஷ்புவிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சினிமாவுல இல்லாத பாப்புலாரிட்டியாடிவி பேட்டில கிடைக்கப் போகுது. திரைப்பட உலகத்துல ஒரு ரூல் இருந்தா அதை மதிக்க வேண்டியது தானே என்கிறார்.

இவருக்கு சிம்ரன் என்ன பதில் சொல்கிறார்.. பார்ப்போம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil