»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

குளிர்பான நிறுவனத்தின் விளம்பரத்திற்காக மதுரை வந்த நடிகை சிம்ரனை அவரது விசிறிகள் சுற்றிச் சூழ்ந்துகொண்டு தொட்டுப் பார்க்கவும், பேசவும் ஆசைப்பட்டதால் பயந்து போன சிம்ரன் போலீஸாரின் பாதுகாப்புடன்காரில் ஏறிப் பறந்தார்.

குளிர்பான நிறுவனம் ஒன்று தனது தயாரிப்புகளை மதுரையில் பிரபலப்படுத்தும் நோக்கில் ஒரு யுக்தியைக்கடைப்பிடித்தது.

மதுரையில் சிம்ரன் கார் மூலம் நகர் வலம் வரும்போது யார் கையில் தங்களது நிறுவனத்தின் குளிர்பானம்இருக்கிறதோ அவருடன் சிம்ரன் சில வார்த்தைகள் பேசுவார், ஆட்டோ கிராப் போடுவார் மற்றும் புகைப்படம்எடுத்துக் கொள்வார் என்று அந்நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

நடிகர், நடிகை என்றால் உயிரை விடும் "மருதக்காரங்களுக்கு" சொல்ல வேண்டுமா என்ன? நகர் முழுவதும் ஒரேகூட்டம். அவர் மதுரை சென்ற அன்று காலையிலிருந்து எங்கு பார்த்தாலும் சிம்ரன் பற்றித் தான் பேச்சு.

விளம்பரத்தில் கூறியபடி ஒரு குளிர் பான விற்பனைக் கடைக்கு வந்தார் சிம்ரன். கூடவே பாதுகாப்பாகபோலீசாரும் வந்திருந்தனர். சிம்ரனைப் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு அவரிடம்நெருங்கி நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிலர் கை குலுக்கினர்.

இதையடுதது ரசிகர்களின் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. இதனால் உணர்ச்சிவசப்பட்ட சிலர் சிம்ரனைத் தொடமுயன்றனர். இதையடுத்து அவர் ரொம்பவும் நெளிய ஆரம்பித்தார். சில ரசிகர்கள் சிம்ரனைத் தொட்டும் விட்டனர்.

அவ்வளவுதான்... ""ஹெல்ப், ஹெல்ப்"" என கத்தியவாறே தனது காரை நோக்கி ஓடத் தொடங்கினார் சிம்ரன்.ஆனாலும் ரசிகர்களும் பின்னாடியே ஓடி வந்து அவரைச் சுற்றி வளைக்க முயன்றனர்.

ரசிகர்களை விலக்க போலீசார் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து லேசான தடியடி நடத்திரசிகர்களைக் கலைத்தனர் போலீசார். சிம்ரனும் காரில் ஏறி அடுத்த இடத்திற்குப் பறந்தார்.

இந்தச் சம்பவத்தையடுத்து மற்ற கடைகளுக்கு சிம்ரன் சென்ற போது ஏராளமான போலீசார் பாதுகாப்புக்குநிறுத்தப்பட்டிருந்தனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil