»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது சிம்ரன் விஷயத்தில் உண்மையாகி இருக்கிறது.

கல்யாணம் ஆகிக் கொண்டு செட்டிலாவதாகச் சொன்ன சிம்ரன் மீண்டும் வாய்ப்பு தேடுகிறார் என்பதையும், தனது கணவரை ஹீரோவாக்கப் பிரம்மப் பிரயத்தனம் செய்கிறார் என்பதையும் நமது வாசகர்களுக்கு முன்பே தெரிவித்திருந்தோம்.

சிம்ரன் நடித்து கடைசியாக வெளியான படம் உதயா. நான்காண்டு கால தயாரிப்பான இந்தப் படம் நான்கு வாரங்கள் கூட ஓடவில்லை. இனி ரிலீஸ் ஆகவிருக்கும் படம் நியூ. இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி சிம்ரன்.

கல்யாணத்துக்கு முன்பே இந்தப் படத்தை நடித்துக் கொடுத்து விட்டார். திருமணத்துக்குப் பின் நடிப்பதில்லை என்ற கொள்கை முடிவில் இருந்த சிம்ரன் போகிற போக்கில் மிச்ச சொச்சம் இருந்த கவர்ச்சி அனைத்தையும் இந்தப் படத்தில் வாரி வழங்கினார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியானது. அங்கு வேறு ஹீரோ வேறு ஹீரோயின். படம் பிளாஃப். இதனால் அப்செட்டான இயக்குனர் சூர்யா மேலும் சில காட்சிகளை வெட்டியும் ஒட்டியும் வருகிறார். அநேகமாக இந்தப் படம் இம்மாத இறுதியில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

இந் நிலையில் சிம்ரன் இரண்டு புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். தனது கணவரை நடிகராக்கும் முயற்சியிலும் வெற்றி பெற்றுள்ளார்.

திரைப்படக் கல்லூரி மாணவரான சுந்தர் இயக்கும் சார்மினார் எக்ஸ்பிரஸ் படத்தில் காது கேட்காத, வாய் பேசாத பெண்ணாக நடிக்கிறார். இந்தப் படம் முழுக்க முழுக்க ரயிலிலேயே படமாக்கப்பட உள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட படம் என்றும் நடிப்பதற்கு நல்ல ஸ்கோப் இருக்கும் படம் என்றும் சிம்ரன் எல்லாரிடமும் கூறி வருகிறார்.

சிம்ரன் நடிக்கும் இன்னொரு படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்குகிறார். இந்தப் படத்தில் சிம்ரனின் கணவர் தீபக் பாஹாவும் நடிகராக அறிமுகமாகிறார். தீபக் விமானப் படையில் வேலை பார்த்தவர் என்று கூறுகிறார்கள். கல்யாணத்துக்குப் பின், இப்போது ஒன் மேன் ஆர்மியாக சிம்ரனின் பாதுகாப்பு வேலையைக் கவனிக்கிறார்.

திருமணமான பின்பும் சிம்ரனின் மீது தமிழ் ரசிகர்களுக்கு கிரேஸ் குறையாததை உதயா படப்பிடிப்பின்போது தீபக் கவனித்தார். இதைப் பயன்படுத்தி தானும் நடிகராவது என்ற ஆசை தீபக்குக்கு வந்து விட்டது. இதனையடுத்து கணவரின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தார் சிம்ரன்.

தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் எல்லாம் தீபக்குக்கும் வாய்ப்புக் கேட்டு அலற வைத்தவர் இறுதியில் ஒரு தயாரிப்பாளரின் தலையில் மிளகாய் அரைத்து சான்ஸ் வாங்கி விட்டார். படத்திலாவது தீபக்குக்கு காமெடியன் வேடம் இல்லாமல் இருந்தால் சரி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil