»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சிம்ரன் கல்யாணம் செய்து கொண்டதையே இன்னும் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் அவரது ரசிகர்களுக்கு மேலும்ஒரு அதிர்ச்சியான செய்தி.

சிம்ரனுக்கு இப்போதெல்லாம் புளிப்பாக சாப்பிட்டால்தான் வாய்க்கு நன்றாக இருக்கிறதாம். என்ன ஊகித்துவிட்டீர்களா? அதே மேட்டர்தானுங்கோ..

தீபக் பாஹாவை திருமணம் செய்து விளையாட்டு போல சில மாதங்களை தள்ளி விட்ட சிம்ரன் இப்போதுமுழுகாமல் இருக்கிறாராம். ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்து வந்த தான் இப்போது தாயாகி விட்டதுசிம்ரனுக்கு ரொம்பவே சந்தோஷமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறதாம்.

இதனால் புதிதாக ஒத்துக் கொண்ட ஒரிரு படங்களிலிருந்தும் விலகியுள்ளார். புதிதாக வரும் வாய்ப்புகளையும்தவிர்த்து வருகிறார். அழகான குழந்தையைப் பெற்று குடும்ப வாழ்க்கையில் மும்முரமாக இறங்க முடிவுசெய்துள்ளாராம் சிம்ரன்.

மேலும் சினிமாவுக்கு நிரந்தரமாக முழுக்குப் போடவும் முடிவு செய்து விட்டாராம் சிம்ரன். இந்த திடீர் முடிவுக்குதாயாகப் போவது மட்டும் காரணமில்லை என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்கள். அது என்னவென்றுகொஞ்சம் காது கொடுத்து கேட்டதை உங்கள் காதுகளில் போடுகிறோம்.

மருந்துக்குக்கூட கோலிவுட் ஆட்களைத் தன்னுடைய கல்யாணத்துக்கு அழைக்காத சிம்ரன், கல்யாணத்துக்குப்பின்பு கோடம்பாக்கம் வந்ததே, தனது கணவர் தீபக் பாஹாவை முன்னுக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்குத்தானாம்.

பின்பு ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் போன் போட்டு, கல்யாணத்துக்கு அழைக்காததற்கு ஸாரி சொன்னவர்அப்படியே சான்ஸூம் கேட்டார். இதில் மனமிளகிய ஓரிரு தயாரிப்பாளர்கள் அட்வான்ஸ் கொடுக்க சிம்ரனைத்தேடிப் போனபோது, தன்னுடைய கணவரைக் கதாநாயகனாகப் போட்டால்தான் கால்ஷீட் தருவேன் என்றுகண்டிஷன் போட்டார்.

இதில் சில தயாரிப்பாளர்கள் எஸ்கேப் ஆகிவிட்டனர். ஆனால் இதற்கெல்லாம் அஞ்சாத ஒரு தயாரிப்பாளர் கதைசொல்ல ஒரு இயக்குநரை அனுப்பி வைத்தார். கதைப்படி ஹீரோ ஒரு வில்லத்தனமும், சைக்கோத்தனமும் கலந்தகேரக்டர்.

பாட்ஷா, முதல்வன் ரேஞ்சுக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த தீபக், சைக்கோ கேரக்டர் என்றதும்நிஜமாகவே சைக்கோ போல் இயக்குநரை திட்டத் தொடங்கி விட்டாராம். தப்பித்தோம், பிழைத்தோம் என்றஇயக்குநர் ஓடிவந்து விட்டார். இதன்பின்பு சிம்ரன் இருந்த ஹோட்டல் பக்கம் நடமாடுவதையே கோலிவுட்ஆட்கள் நிறுத்திவிட்டார்கள்.

வேறுவழியின்றி ஹோட்டல் அறையிலேயே சிம்ரனும், தீபக்கும் முடங்கி இருந்ததில் ரூம் வாடகை எகிறியது தான்மிச்சம் என்கிறது கோடம்பாக்கம். இதையடுத்தே கலைச்சேவையை மறந்தவிட்டு கணவர் சேவையில் இறங்கசிம்ரன் முடிவெடுத்தாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil