»   »  கடுங்குளிரில் சிம்ரன் குத்தாட்டம்

கடுங்குளிரில் சிம்ரன் குத்தாட்டம்

Subscribe to Oneindia Tamil
Simran
தமிழ் கைவிட்டு விட, மலையாளமோ ஏமாற்றி விட, தேறுதல் தந்துள்ள தெலுங்கில் மெல்ல மெல்ல செட்டிலாகி வருகிறார் சிம்ரன். சமீபத்தில் தெலுங்கு காமெடியன் கிருஷ்ணமோகனுடன் பாங்காக் போய் ஒரு சூப்பர் குத்தாட்டத்திலும் ஆடி வருகிறார்.

தமிழ், தெலுங்கு என தென்னிந்தியாவை ஒரு காலத்தில் கலக்கி வந்த சிம்ரன், கல்யாணம் செய்து கொண்டு, குழந்தையயையும் பெற்றுக் கொண்டு மீண்டும் நடிக்க வந்தார்.

ஆனால் வரவேற்கத்தான் யாரும் இல்லை. பகீரதப் பிரயத்தனம் செய்தும் சிம்ரனுக்கு அக்கா, அண்ணி வேடம் கூட கிடைக்கவில்லை. இதனால் அப்செட் ஆகியிருந்த சிம்ரனைக் கூப்பிட்டு மலையாளத்தில் ஒரு படத்தை எடுத்தனர். ஆனால் அந்தப் படத்தில் எய்ட்ஸ் வந்தவராக சிம்ரனை சித்தரித்தனர். இதனால் அதிர்ச்சியாகி விட்டார் சிம்ரன்.

இப்படி தமிழும், மலையாளமும் அப்செட் ஆக்கி விடவே, தெலுங்கில் பார்வையைத் திருப்பினார். அதற்கு கை மேல் பலனும் கிடைத்தது. இப்போது சிம்ரன் கைவசம் இரு படங்கள் உள்ளனவாம்.

ஒக்க மகடு மற்றும் அப்பாரவ் 40 பிளஸ் என இரு படங்களில் பிசியாக இருக்கும் சிம்ரன், ஒரு குத்தாட்டத்திலும் கலக்கியுள்ளார்.

இந்தப் பாட்டுக்கு சிம்ரனுடன், காமெடி ஆக்டர் கிருஷ்ணமோகன் கூட ஆடியுள்ளாராம். சமீபத்தில் இந்தப் பாட்டை படமாக்குவதற்காக பாங்காக்குக்குப் பயணமானார் சிம்ரன். கடும் குளிர் நிலவும் நிலையிலும் கூட அதைப் பொருட்படுத்தாமல் சிம்ரனின் குத்தாட்டத்தைப் படமாக்கியுள்ளனராம்.

தெலுங்கில் தனக்கு தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மத்தியில் நல்ல எண்ணம் இருப்பதால் பேசாமல் தெலுங்கில் வருகிற வாய்ப்புகளை ஏற்றுக் கொண்டு இப்படியே செட்டிலாகி விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம் சிம்ரன்.

அதேசமயம், தமிழில் விளம்பரப் பட வாய்ப்புகள் சிம்ரனைத் தேடி நிறைய வருகிறதாம். குறிப்பாக நகைக் கடை, ஜவுளிக் கடை விளம்பரங்கள்தான் நிறைய வருகிறதாம். அவரும் நல்ல துட்டு கொடுக்கும் விளம்பர வாய்ப்புகளை ஏற்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil