»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிம்ரன் தேனிலவு போகும் இடத்திலேயே உதயா படத்தின் சூட்டிங் நடத்தத் தயார் என்று தயாரிப்பாளர் பிரமிட்நடராஜன் கூறியுள்ளார்.

திருமண அவசரத்தில் சிம்ரன் கைவிட்ட தயாரிப்பாளர்களில் ஒருவர் பிரமிட் நடராஜன். விஜய்- சிம்ரனை வைத்துஇவர் இந்தப் படத்தை எடுத்து வந்தார். பொங்கலுக்கு ரிலீஸ் என முடிவு செய்யப்பட்டிருந்தது.

இரண்டு பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கி என்ற நிலையில் சிம்ரனின் கால்ஷீட் கிடைக்கவே இல்லை. இதனால்படத்தை முடிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதையடுத்து சிம்ரனுக்கு எதிராக நீதிமன்றம் சென்றார். அப்போது இந்தப் படத்தை முடிக்காமல் வேறு படங்களில்புக் ஆகக் கூடாது என சிம்ரனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


மணமேடையில்- கணவர் தீபக்குடன் சிம்ரன்
இப்போதைக்கு எந்தப் படத்திலும் நடிக்கத் தயாராக இல்லாத சிம்ரன், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடுசெய்யவில்லை. நேற்று முன் தினம் தீபக்கைத் திருமணம் செய்த அவர் தேனிலவுக்கு சுவிஸ் செல்வதில் தீவிரமாகஉள்ளார்.

இந் நிலையில் சிம்ரன் ஹனிமூன் செல்லும் நாட்டில் வைத்தே உதயா படத்தின் பாடல் காட்சிகளை எடுத்துமுடித்துவிடத் தயாராக இருப்பதாக பிரமிட் நடராஜன கூறியுள்ளார்.

இது தொடர்பாக அகில இந்தியப் படஅதிபர்கள் சங்கத் தலைவர் சவண் குமார் மூலமாக சிம்ரனுடன் நடராஜன் பேச்சு நடத்தி வருகிறார்.

சிம்ரன் இதற்கு ஒப்புக் கொண்டால், விஜய் மற்றும் படக் குழுவினர் சிம்ரன்-தீபக் தேனிலவு கொண்டாடச் செல்லும்நாட்டுக்குச் செல்வர். இதற்கு சிம்ரன் ஒப்புக் கொள்ளாவிட்டால் அவரை சும்மா விட மாட்டேன் என்றுஎச்சரித்துள்ள நடராஜன், அப்படி ஒரு நிலை வந்தால் சிம்ரன் ஹனி மூன் செல்லவே தடை விதிக்கக் கோரிநீதிமன்றத்தை அணுகுவேன் என்று கூறியுள்ளார்.

கடைசி நாள் உணர்ச்சி மயமான சிம்ரன்

இதற்கிடையே தான் நடித்த கடைசிப் படமான நியூ படத்தின் கடைசி நாள் சூட்டிங்கின்போது சிம்ரன் மிகவும்உணர்ச்சிவசப்பட்டாக அதில் உடன் நடிப்பவரும் இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார்.

சூர்யா கூறியதாவது: அன்று முழுவதும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் காணப்பட்டார் சிம்ரன்.படப்பிடிப்புக் குழுவினர் அனைவருக்கும் இனிப்பும், பணம் வழங்கினார். அனைவருக்கும் தனது நன்றிகளைத்தெரிவித்துக் கொண்டார். கடைசிக் காட்சியை படமாக்கியபோது, அடிக்கடி ரீடேக் கேட்டார். இத்தனைக்கும்காட்சி அருமையாக வந்திருந்தது என்று நாங்கள் கூறினாலும் கூட, இல்லை, இல்லை இன்னும் கொஞ்சம் நல்லாசெய்யனும் என்று கூறினார்.

அவரது நடிப்புக்கும், ஸ்டைலுக்கும் ஈடாக இங்கு யாரும் இல்லை. திருமணத்திற்குப் பிறகும் சிம்ரன் தொடர்ந்துநடிக்கலாம். விஜயசாந்தி போல, சிம்ரனுக்கும் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் உண்டு. இன்னும் 5 அல்லது 6மாதத்திற்குப் பிறகு சிம்ரன் நடிக்க வரலாம்.

கொசுறு: தமிழ்த் திரையுலகமே ஒட்டுமொத்தமாக சிம்ரன் திருமணத்தை புறக்கணித்தபோதும் சூர்யா மட்டும்மும்பை போய் தலையைக் காட்டிவிட்டு வந்தாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil