»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ரஜினி, தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரம். ரஜினி படம்ரிலீஸாகிறது என்றாலே அவரது ரசிகர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் அது ஒரு தீபாவளி மாதிரிதான்.

அத்தகைய மாஸ் ஹீரோவான ரஜினி, 2 வருட இடைவெளிக்குப் பின் தனது அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பைவெளியிட்டுள்ளார். சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சந்திரமுகி என்று பெயரிடப்பட்டதும்,படத்தை இயக்குவது பி.வாசு என்பது கடந்த வார செய்திகள்.

இப்போது லேட்டஸ்ட் நியூஸ் படத்தில் இரண்டு கதாநாயகிகள். அதில் ஒருவர் சிம்ரன்.

ரஜினி சந்திரமுகி படத்தை அறிவித்ததும், மோகன்லால் நடித்த மணிச்சித்ரதாழ் என்ற மலையாள படத்தைதழுவிதான், சந்திரமுகியின் கதை அமைக்கப்பட்டிருப்பதாக கோலிவுட்டில் பேசப்பட்டது. இப்போது கதைஅதுவல்ல என்கிறார் இயக்குநர் பி.வாசு.

அவர் கூறியதாவது:

சந்திரமுகி, மணிச்சித்ரதாழ் படத்தின் ரீமேக் அல்ல. அந்தப் படம் ஒரு பேயையும், பேய் ஓட்டுபவரையும் பற்றியகதை. ஆனால் சந்திரமுகியின் கதை வேறு. இந்தப் படத்தில் பேய் கிடையாது. ரஜினி பேய் ஓட்டுபவரும் அல்ல.

மணிச்சித்ரதாழ் படத்தில் மோகன்லால் இடைவேளைக்கு சற்று முன்புதான் என்ட்ரி ஆவார். ரஜினியை அப்படிகாட்ட முடியுமா? காட்டினால்தான் அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

சந்திரமுகி படம் முழுக்க முழுக்க என்னுடை கதை. வதந்தி பரப்புபவர்களை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.அவர்கள் வேலையை அவர்கள் செய்யட்டும். நம் வேலையை நாம் செய்வோம் என்று ரஜினி சாரேசொல்லிவிட்டார்.

என்னிடம் ஒரு ரசிகர், தலைவர் படத்துக்குப் போய் சந்திரமுகி என்று ஒரு பெண்ணின் பெயரை தலைப்பாக வைத்துஇருக்கிறீர்களே என்று கேட்டார். இதுபோன்ற கேள்விகளுக்கு என்னுடைய பதில், எம்ஜிஆர் புகழின் உச்சத்தில்இருந்தபோதுதான் மகாதேவி என்ற படத்தில் நடித்தார். அதுமட்டுமல்ல, அவருடைய சொந்த படத்துக்குஅடிமைப்பெண் என்றுதான் பெயர் சூட்டினார்.

சந்திரமுகியில் 2 கதாநாயகிகள் இருக்கிறார்கள். அதில் ஒரு கதாநாயகியாக நடிக்க சிம்ரனை ஒப்பந்தம்செய்துள்ளோம். இன்னொரு கதாநாயகியை தேடி வருகிறோம். பெரும்பாலும் அது மும்பையை சேர்ந்தபுதுமுகமாக இருக்கலாம் என்று கூறினார்.

சிம்ரன் தவிர வடிவேல், விஜயகுமார், கோட்டா சீனிவாசராவ், அலெக்ஸ் ஆகியோர் படத்தில் ஒப்பந்தம்செய்யப்பட்டுள்ளனர். கதாநாயகிகள் இருவரில் அமைதியான கேரக்டராம். மற்றொருவர் அல்ட்ரா மாடர்னாம்.

இதில் சிம்ரன் எந்தக் கேரக்டரில் நடிக்கிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்புமதுரை வந்த சிம்ரன், ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்று கூறினார். இந் நிலையில்அவருக்கு இந்த ஜாக்பாட் அடித்துள்ளது.

முன்னதாக சிம்ரன் கர்ப்பமாக இருக்கிறார் என்றும் குழந்தை பிறந்த பின்புதான் நடிக்க வருவார் என்றும்கூறப்பட்டது. ஆனால் சிம்ரனுக்கு ஒரு குளிர்பான கம்பெனி விளம்பரத்துக்காக 5 வருட ஒப்பந்தம் போட்டுள்ளார்;அது முடியும்வரை கர்ப்பமாக முடியாது என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

அது உண்மைதான் என்று கூறும் வகையில், இப்போது சிம்ரன் ரஜினி படத்தை ஒத்துக் கொண்டுள்ளார். படம்நவம்பர் முதல் வாரத்தில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil