»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

காதலர் தீபக் பாஹாவை வரும் 2ம் தேதி சிம்ரன் கைப்பிடிக்க உள்ள நிலையில் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார் தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன்.

உதயா என்ற படத்தில் நடிக்க அட்வான்ஸை வாங்கிவிட்டு டேக்கா கொடுத்ததால் இந்த வழக்குப் போடப்பட்டுள்ளது. விஜய், சிம்ரனை வைத்து இந்தப் படத்தை இரு வருடங்களுக்கு முன் துவக்கினார் பிரமிட் நடராஜன். ஆனால், பல்வேறு பிரச்சனைகளால் படப் பிடிப்பு மிக மெதுவாக நடந்தது.

படத்தை முடிக்க சிம்ரனிடம் இருந்து 12 நாள் கால்ஷீட் வேண்டுமாம். பலமுறை தொங்கியும் கால்ஷீட் தராமல் இழுத்தடித்துவிட்டார் சிம்ரன். இந் நிலையில் தமிழ் சினிமாவுக்கே குட்பை சொல்லிவிட்டு திருமணத்துக்கு அவர் தயாராகிவிட்டதால், அதிர்ந்து போன பிரமிட் நடராஜன் சென்னை நகர சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதை விசாரித்த நீதிமன்றம், இந்தப் படத்தை முடிக்காமல் வேறு எந்தப் படத்திலும் சிம்ரன் நடிக்கக் கூடாது என்றும் பிரமிட் நிறுவனத்துக்கு 12 நாள் கால்ஷீட் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சிம்ரன் மேல் முறையீடு செய்வாரா அல்லது ஒருவேளை தேனிலவை முடித்துவிட்டு வந்து உதயா படத்தில் மீண்டும் நடிப்பாரா என்று தெரியவில்லை.

கொசுறு: தனக்கு வாழ்வளித்த தமிழ் சினிமாவுக்கு "மரியாதை" செலுத்தும் விதமாகவும், ஆதரவு கொடுத்த தமிழ் ரசிகர்களுக்கு "நன்றி" சொல்லும் விதமாகவும், தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சி எதையும் சிம்ரன் சென்னையில் நடத்தப் போவதில்லையாம். திருமணத்தோடு, சென்னைக்கே ஒட்டுமொத்த கும்பிடு போடத் திட்டமிட்டுள்ளார் சிம்ரன். வாழ்க தமிழ் ரசிகர்கள்.. !

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil