»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

"கிச்சா வயசு 16 படத்தில் நான் கவர்ச்சியாக நடிக்கவில்லை என்று நடிகை சிம்ரன் கூறியுள்ளார்.தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த சிம்ரன், திருமணத்திற்கு பிறகு நடிக்கும் படம் என்ற பெரும்எதிர்பார்ப்புடன் "கிச்சா வயசு 16 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

ஆனால் யார் கண் பட்டதோ, தொடங்கிய வேகத்திலேயே திடீரென படப்பிடிப்பு நின்று போனது. சிம்ரனுக்கு சம்பளப் பாக்கி,அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்றெல்லாம் ஒரு புறம் பரபரப்பாக காரணங்கள் கூறப்பட்ட போதிலும், சிம்ரன் இதைப்பற்றிஎல்லாம் கவலைப்படாமல் தனது காதல் கணவருடன் லண்டனுக்குப் பறந்து விட்டார்.

லண்டன் சென்று சமீபத்தில் சென்னை திரும்பிய சிம்ரன் என்ன நினைத்தாரோ, வந்த வேகத்தில் கிச்சாவில் மீதமிருந்த தனதுபகுதியை மள மளவென நடித்துக் கொடுத்துவிட்டார். பாய்ஸ் மணிகண்டாவுடனான சில்மிஷக் காட்சிகளிலும் சிம்ரன் மிகநெருக்கமாக நடித்ததாகவும் கூறப்பட்டது. இந்தத் தகவலை தயாரிப்பாளர் தரப்பே பரப்பியது.

இந் நிலையில் "கிச்சா வயசு 16 படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீதரன், சிம்ரன் மீது நேரடியாக பரபரப்பு புகாரைக் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், சிம்ரனுக்கு திருமணமான புதிதில் மும்பைக்கு சென்று படத்தின் கதையைக் கூறினோம்.

தன் கணவரையும் இந்தப் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தினார். நாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் படப்பிடிப்புக்கு அவர் ஒத்துழைக்கவில்லை. படப்பிடிப்பின் போது அவர் கலாட்டா செய்தார்.

இதனால் வேறு வழியில்லாமல் அவரது கணவருக்கு படத்தில் சின்ன வேடம் கொடுத்தோம். அதன் பிறகே அவர் நடித்துக்கொடுத்தார் என்றார்.

இது குறித்து மும்பையிலுள்ள சிம்ரன் கூறுகையில், "கிச்சா வயசு 16 படத்தில் எனக்கு பேசிய படி சம்பளம் சரியாகக் கொடுக்காமல்இழுத்தடித்தார்கள். இதனால் தான் அந்தப் படத்தில் தொடர்ந்து நான் நடிக்கவில்லை.

என்னை வைத்து அந்தப் படத்தில் விளம்பரம் தேட நினைப்பவர்கள் என் மீது குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்கள். நான் இப்போதுகர்ப்பமாக இருப்பதால் அமைதியாக இருக்க விரும்புகிறேன்.

நான் அந்தப் படத்தில் கவர்ச்சியாகவும் நடிக்கவில்லை. என்னைப் பற்றி எத்தனையோ செய்திகள் வந்திருக்கிறது. அதில் இதுவும்ஒன்று. தமிழ் ரசிகர்கள் மீது நான் மிகுந்த பாசம் வைத்துள்ளேன்.

சென்னை வரும்போது நான் எல்லா உண்மைகளையும் கூறுகிறேன் என்றார்.

Read more about: deny, fight, producer, simran, tamil cinema
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil