»   »  தெலுங்கிலிருந்து குலுங்கும் சிம்ரன்

தெலுங்கிலிருந்து குலுங்கும் சிம்ரன்

Subscribe to Oneindia Tamil

தெலுங்கிலிருந்து கோலிவுட்டுக்கு குலுக்கல் ஆட்டம் போட ஓடோடி வந்திருக்கும் சிம்ரன் கான், ரகஸ்யாக்களுக்கும், முமைத்கான்களுக்கும் கடும் போட்டியை ஏற்படுத்தியிருக்கிறார்.

கிளாமர் குத்துப் பாட்டுக்களுக்குப் பெரும்பாலும் மும்பையிலிருந்துதான் சுந்தரிகள் சொக்க வைக்க வருவார்கள். ஆனால் அவ்வப்போது அண்டை மாநிலங்களிலிருந்தும் அணல் பறக்கும் அழகிகள் வருவதுண்டு.

அந்த பாரம்பரியத்தின்படி ஆந்திராவிலிருந்து வந்து இறங்கியுள்ளார் சிம்ரன் கான். தெலுங்கில் கிளாமர் ஆட்டங்களில் படு பிசியாக இருப்பவர் சிம்ரன் கான். நடிப்போடு, தளுக்கான ஆட்டத்திலும் சிம்ரன் கில்லாடியாம்.

இப்போது தமிழுக்கும் தனது சேவையை விஸ்தரித்து விஸ்வரூபம் காட்ட வந்துள்ளார். சிம்புவுடன் காளை படத்தில் ஜோடி போடுகிறார் சிம்ரன். அவரும், சிம்புவும் சேர்ந்து ஆடிய பிரமாதமான குத்துப் பாட்டு பிரமாண்டமாக வந்திருக்கிறதாம். சொல்லி சிலாகிக்கிறார் இயக்குநர் தருண் கோபி.

ஏவி.எம். ஸ்டுடியோவில் ஷூட்டிங்கில் பிசியாக இருந்த சிம்ரனை சந்தித்தபோது, படு சந்தோஷமாக பேசினார் சிம்ரன். தமிழ் இயக்குநர்களிடமிருந்து எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கோலிவுட்டின் சூழ்நிலை எனக்கு ரொம்பப் பிடித்துள்ளது. சென்னை மிகவும் விசேஷமான நகரம். பெரும் நகரம், எங்களை மாதிரி திறமையானவர்களைக்கு பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள்.

தமிழில் ஆறு படங்களில் நான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். அதில் 2 படங்களில் நான் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி விட்டனர். குத்துப் பாட்டு நாயகிகளுக்கு நான் மிரட்டலாக இருப்பேன் என்று நினைக்கவில்லை. காரணம் நான் குத்துப் பாட்டுக்கு ஆடும் டான்ஸர் இல்லை என்றார்.

திருத்தம் படத்தில் நாயகன் ஹரிகுமாருடன் சிம்ரனுக்கு சிறப்பான வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். தான் நடிக்கும் படங்களில் அனைவருடனும் மிகச் சிறப்பாக ஒத்துழைக்கிறாராம். கவர்ச்சி காட்ட வேண்டும் என்றால் கொஞ்சம் கூட தயங்குவதே இல்லையாம். அதனால் சிம்ரனுக்கு தமிழ் சினிமாவில் மிக்ச சிறப்பான எதிர்காலம் இருப்பதாக அவரை வைத்துப் படம் எடுக்கும் அத்தனை பேரும் ஒத்தக் குரலில் ஒட்டுக்காக சொல்கிறார்கள்.

பிரமாதம், பிரமாதம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil