For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஸ்பெஷல்ஸ்

  By Staff
  |

  சுள்ளான் படத்தின் மூலம் கிளுகிளுப்பாக அறிமுகமாகி தனுசுக்கும் ரசிகர்களுக்கும் சூடேற்றிய சிந்து துலானி, மன்மதனில் சிம்புவுடன் மகாதாராளம் காட்டி தியேட்டர்களை கிடுகிடுக்க வைத்தார்.

  சுள்ளான் படம் தன்னை எங்கேயோ வைத்து விடும் என்று சிந்து துலானி ரொம்பவே எதிர்பார்த்தார். ஆனால் படம் பொளார் எனபுட்டுக்கிட்டதால், சிந்து நொந்து விட்டார். அவர் நினைத்தது மாதிரி தமிழில் புதிய வாய்ப்புக்கள் வரவில்லை.

  மும்பை வரவான இவர் தான் கிளம்பி வந்த தெலுங்குக்கே போனார். அங்கு சிந்துவுக்கு மீண்டும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால்அங்கேயே செட்டில் ஆகிவிடும் மூடில் இருந்தவரை சிம்பு தொடர்பு கொண்டு மன்மதனில் நடிக்கக் கூப்பிட்டார்.

  ஆனால், சிம்புவின் தொல்லைகளை நன்கறிந்த சிந்து அந்த சான்ஸ்சுக்கு நோ சொன்னார். அப்புறம் என்ன நடந்ததோ (எல்லாம் சம்பளம்செய்யும் மாயம் தான்) மன்மதனில் நடிக்க ஒப்புக் கொண்டார். சின்ன வேடத்தில் வந்தவர், படத்தின் படுக்கையறைக் காட்சியில்கண்ணாபின்னாவென நடித்து பார்ப்பவர்களைத் திணறச் செய்துவிட்டார் சிந்து.

  (இந்தக் காட்சியில் சிந்து நடித்ததில் 3ல் ஒரு பகுதியைத் தான் சென்சார் போர்ட் அனுமதித்தது. மிச்சத்தை கத்திரி போட்டுவிட்டார்கள்.சிந்துவின் திறமை முழுசாய் பார்த்திருந்தால் அம்புட்டுதானாம்... )

  இதற்கு உடனடியாக நல்ல ரீயாக்ஷனும் கிடைத்துவிட்டது. அலையடிக்குதே என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க அட்வான்ஸைதிணித்துவிட்டார்கள். ஹீரோ புதுமுகமாம்.


  ஸ்டுடியோ லைட்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்குவது காளிமுத்து. படப்பிடிப்பு வரும் 20ம்தேதி தொடங்கி விறுவிறுவென ஒரே ஷெட்யூலில் முடிய இருக்கிறது.

  ஆர்.பி.செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த பல படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்காளிமுத்து. இவருக்கு முதல் படம் இதுவே.

  பிப்ரவரி 14ம் தேதி படத்தை திரைக்குக் கொண்டு வந்துவிடுவார்களாம். பரணியின் இசையில் 5 பாடல்களை ரெக்கார்ட் செய்துமுடித்துவிட்டார்கள். அனுராதா ஸ்ரீராம், திப்பு, மஹதி, மதுமிதா, ஹரிஸ் ராகவேந்தர் ஆகியோரின் குரலில் அழகாய் வந்துள்ளனவாம்பாடல்கள்.

  இதில் ஹீரோயினுக்கே முக்கிய வேடமாம். குத்தாட்டம் போட்டு கலக்க சிந்துவே போதும் என்றாலும் கொஞ்சம் ஸ்பைசியாக இருக்கவேண்டும் என்பதற்காக மும்பையில் இருந்து புது வரவைக் கொண்டு வந்து ஒரு பாடலுக்கு இடி டான்ஸ் போட வைக்கப் போகிறார்கள்.

  இந்தப் படத்தில் சிந்துவின் கேரக்டர் கிட்டத்தட்ட மன்மதன் சிம்பு கேரக்டர் மாதிரியாம். தன் அழகால் ஆண்களை மயக்கி காலி செய்யும்வேஷமாம். சிந்துவின் அந்த திறமைக்கு படத்தில் நிறையவே வேலை இருக்கும் போலத் தெரிகிறது.

  இதற்கிடையே சுள்ளான் படத்தை இயக்கிய ரமணாவுக்கும் சிந்துவுக்கும் நெருக்கமான நட்பு உருவாகியுள்ளதாக கோலிவுட்டில்கிசுகிசுக்கிறார்கள். முன்பு சங்கவியுடன் கிசுகிசுக்கப்பட்டவர் தான் இவர்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X