»   »  சிங்கப்பூர் பறக்கும் கோலிவுட்

சிங்கப்பூர் பறக்கும் கோலிவுட்

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக 20க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் சிங்கப்பூர் செல்கின்றனர்.

2006-ம் ஆண்டுக்கான சர்வதேச தமிழ் திரைப்பட விழா சிங்கப்பூரில் உள்ள மேக்ஸ் எக்ஸ்போ ஸ்டேடியத்தில் வருகிற 14ம் தேதி நடைபெறுகிறது.

இதில் சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குனர் உள்ளிட்டோருக்கான விருதுகள் வழங்கப்படுகிறது.

சென்னையைச் சேர்ந்த வி4 எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் சிங்கப்பூர் சர்வதேச மீடியா கன்சல்டன்ட்ஸ் ஆகியவை இணைந்து இதை நடத்துகின்றன.

விழாவில் கலந்து கொள்வதற்காக ஆசின், ஸ்னேகா, நிலா, மும்தாஜ், நமீதா, ரீமாசென் மற்றும் பரத், சிம்பு, ஆர்யா ஆகியோர் சிங்கப்பூர் பறந்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு புகழ் ரோபோ சங்கர் மற்றும் அரவிந்த் ஆகிய மிமிக்ரி கலைஞர்களும் கலந்து கொண்டு அசத்தவுள்ளனர்.

பிரமாண்டமான அளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியைக் காண சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil