twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    6 தேசிய விருது..15கேரள மாநில அரசு..‘சின்னக்குயில்‘ சித்ரா...பிறந்த நாள் ஸ்பெஷல் ரவுண்டப்!

    |

    சென்னை : வெள்ளித்திரையில் சின்னகுயில் என்று பெருமையோடு அழைக்கப்படும் பாடகி சித்ராவின் பிறந்தநாளில் அவரை பற்றி ஒரு ஸ்பெஷல் ரவுண்டப்!

    40 ஆண்டு திரை இசைப்பயணம்...25 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்கள்... சீன விழாவில் கௌரவிக்கப்பட்ட இந்திய பாடகர் என்ற பெருமையை பெற்றவர் சின்னக்குயில் சித்ரா.

    தமிழ்நாடு, ஆந்திரா,கேரளம்,மேற்குவங்கம், கர்நாடகம்,ஓடிசா அரசுகளின் மாநில விருதுகள் பத்மஸ்ரீ, பத்மபூசன் விருது என பல விருதுகளுக்கு சொந்தக்காரி பாடகி சித்ரா.

     நா.முத்துக்குமாருக்கு ஜி.வி.பிரகாஷ் மீது கோவம் வரும்போது இதைத்தான் செய்தாராம் நா.முத்துக்குமாருக்கு ஜி.வி.பிரகாஷ் மீது கோவம் வரும்போது இதைத்தான் செய்தாராம்

    பாடகி சித்ரா

    பாடகி சித்ரா

    1963ம் ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இசை குடும்பத்தில் பிறந்தார் சித்ரா. இவருடைய தந்தை கிருஷ்ணன் நாயர் வானொலி பாடகராவார். இவரது தாயார் சாந்தக்குமாரி ஓர் வீணைகலைஞர் ஆவர். இதனால், சிறு வயதிலேலே இசையின் மீது ஈடுபாடு ஏற்பட்டு, ஐந்து வயது இருக்கும் போதே தந்தை பாடிய அதே வானொலியில் சித்ராவும் பாடினார்.

    திரைப்பயணம்

    திரைப்பயணம்

    மேலும், தனது 13வது வயதில் மிகவும் சிக்கலான தோடிராகத்தில் பாடலை பாடி தேசிய அளவில் திறமை வாய்ந்தோறுக்கான உதவித்தொகையை 7 ஆண்டுகள் பெற்றார். இசை நிகழ்ச்சியில் பாடி வந்த சித்ராவுக்கு, தனது 16வது வயதில், மலையாளத் திரைப்படம் ஒன்றில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. இதுவே சித்ராவின் திரைப்பயணத்திற்கு திறவுகோலா அமைந்து. அந்த நேரத்தில், இந்த பிஞ்சு குரல் எதிர்காலத்திதில் இத்தனை மாயாஜாலம் செய்யும் என்று யாருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

    சின்னக்குயில் சித்ரா

    சின்னக்குயில் சித்ரா

    இளையராஜாவின் இசையில் நீ தானா அந்தக் குயில் என்ற திரைப்படத்தில் அவர் பாடிய பூஜைக்கேத்த பூவிது, கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட என்ற என்ற பாடலை பாடி அனைவர் இடத்திலும் பாராட்டை பெற்றார். இதையடுத்து,பூவே பூச்சூடவா படத்தில் இவர் பாடிய சின்னக்குயில் பாடும் பாட்டுக்கேக்குதா பாடலின் மூலம் சின்னக்குயில் சித்ரா என்ற பட்டத்தை பெற்றார்.

    பல விருதுகள்

    பல விருதுகள்

    சிந்து பைரவி படத்திற்காக தனது 24வது வயதில் முதல் முதலில் தேசிய விருதை பெற்றார் சித்ரா. இதையடுத்து 6 முறை தேசிய விருதையும், 5 முறை தென்னிந்திய பிலிம்பேர் விருதையும், 15 முறை கேரள மாநில விருதையும், 6 முறை ஆந்திர மாநில விருதையும், 4முறை தமிழ்நாடு மாநில விருதையும், 2 முறை கர்நாடக மாநில விருதையும் வென்றுள்ள சித்ராவுக்கு இனி கொடுக்க விருதே இல்லை என்று சொல்லலாம்.

    பல மொழிகளில்

    பல மொழிகளில்

    இசைபுயல் ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் அதிகபாடலை பாடிய பாடகி என்ற பெருமை சித்ராவுக்கு உண்டு. 90களில், ரஹ்மான் இசையில் கிராமத்து மண் வாசனை ததும்பும் பாடல்கள் முதல் கர்நாடக இசை பாடல்கள் வரை அனைத்து பாணியிலும் பாடி இருக்கிறார். இந்திய மொழிகள் மட்டுமல்லாது, சிங்களம்,லத்தின், அரேபியம், பிரஞ்சு மொழியிலும் பாடல்களை பாடி இருக்கிறார்.

    வேதனையில் சித்ரா

    வேதனையில் சித்ரா

    விஜயசங்கர் என்ற இன்ஜீனியரை திருமணம் செய்து கொண்ட சித்ராவுக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது. ஏ.ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்ற போது, ஒரே மகள் நந்தனா, நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். மகள் இழந்த சோகத்தால் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்த சித்ரா, மகளின் நினைவாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை சித்ரா செய்து வருகிறார்.

    English summary
    playback singer chithra special roundup
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X