»   »  போஜ்பூரியில் 'ஹா ஹ்ஹா.. ஹ்ஹாஹா'

போஜ்பூரியில் 'ஹா ஹ்ஹா.. ஹ்ஹாஹா'

Subscribe to Oneindia Tamil
Click here for more images
1975ல் வெளியாகி சக்கை போடு போட்டு இன்று வரை சினிமா ரசிகர்களின் விருப்பப் படங்களில் ஒன்றாக திகழும் ஷோலே, போஜ்பூரியில் ரீமேக் ஆகிறது. கப்பார் என்ற பெயரில் உருவாகும் இப்படத்தில் போஜ்பூரி சூப்பர் ஸ்டார் ரவி கிஷன் நடிக்கவுள்ளார்.

அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ஜெயா பாதுரி, ஹேமமாலினி, சஞ்சீவ் கபூர், அம்ஜத்கான் ஆகியோரின் அட்டகாச நடிப்பில் உருவான கலக்கல் படம் ஷோலே. இன்று வரை திரை ரசிகர்களின் விருப்பப் படங்களில் ஒன்றாக திகழ்கிறது ஷோலே.

இப்படத்தை சமீபத்தில் ராம்கோபால் வர்மா ஆக் என்ற பெயரில் ரீமேக் செய்தார். ஆனால் படம் படு மோசமாக ஓடி ஊற்றிக் கொண்டது.

இந்த நிலையில் தற்போது ஷோலேவை போஜ்பூரிக்குக் கொண்டு போகிறார்கள். சின்னத்திரை தயாரிப்பாளரான ஏக்தா கபூர் இப்படத்தைத் தயாரிக்கிறார். ரவிகிஷண் நாயகனாக நடிக்கிறார். (குழந்தை குட்டிகளுடன் வசிக்கும் இவர் நடிகை நக்மா, ரம்பாவோடு கிசுகிசுக்கப்பட்டவர் என்பது முக்கியமான நியூஸ்)

இப்படம் குறித்து ரவி கிஷண் கூறுகையில், ஷோலே படைத்த சாதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்று வரை ஷோலேவின் சாதனைகள் அப்படியேதான் இருக்கின்றன.

பல தியேட்டர்களில் இந்தப் படம் பல மாதங்களாக ஓடியது. சில தியேட்டர்களில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடி சாதனை படைத்தது. அந்த மாஜிக்கை கப்பார் படமும் நிகழ்த்தும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.

கப்பார் படத்தில் அமிதாப், தர்மேந்திரா கேரக்டர்கள் கிடையாதாம். அதற்குப் பதிலாக கப்பார் சிங் கேரக்டர்தான் நாயகனாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ரோலில்தான் ரவி கிஷண் நடிக்கவுள்ளார். போலீஸ் அதிகாரி தாக்கூர் வேடத்தில் ஜிதேந்திரா நடிக்கிறார்.

இப்படம் கப்பார் சிங்கின் பார்வையில் உள்ள நியாயங்களை வெளிக்காட்டும் படமாக இருக்கும் என்கிறார் ரவி கிஷண். ஷோலே, படம் தாக்கூரை மையமாக கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்படத்தில் கப்பார் சிங்கை மையமாகக் கொண்டு கதை மாற்றப்பட்டுள்ளதாம்.

காலத்தின் கோலத்தால் கப்பார் வில்லனாக மாறுவது போல கதையை மாற்றியுள்ளனர்.

இந்தப் படத்தை ஹோலி பண்டிகையின்போது திரையிட ரவிகிஷண் திட்டமிட்டுள்ளார். ரவிகிஷணால் அம்ஜத் கானில் உலகப் பேமஸான 'ஹா ஹ்ஹா.. ஹ்ஹ்ஹாஹாஹா' சிரிப்பை செய்ய முடியுமா?

அதெல்லாம் சரி... கப்பாருக்கு ஜோடி நக்மாவா??

Read more about: nagma, ravi kishen

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil