»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

"சார்லி சாப்ளின்" நாயகியான காயத்ரி ரகுராமுக்குப் படங்கள் வந்து குவியத் தொடங்கி விட்டன. இப்போது அவருடைய தங்கை சுஜா ரகுராமும் அவருடன் இணைந்து பெரிய திரையைக் கலக்க வருகிறார். அக்காவும் தங்கையும் இணைந்து "மனசெல்லாம் நீயே" என்ற படத்தில் ரசிகர்களை படபடக்க வைக்க வருகிறார்கள். அடுத்த நக்மா-ஜோதிகா?

கமலஹாசன் தனது "மருதநாயகம்" ஸ்கிப்ரிட்டை தூசி தட்டிக் கொண்டிருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் படத்தை ஆரம்பிப்பார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஜெயா டி.வியின் "அண்ணி" மெகா தொடரில் கலக்கி வரும் செளம்யா, பெரிய திரைக்கு வர ரொம்பவும் தயங்குகிறார். வருகிற பல வாய்ப்புகளை தட்டிக் கழித்து வருகிறாராம். பெரிய திரைக்குச் சென்றால் தனது பிரைவசி பாதிக்கப்படும் என்று பயப்படுகிறாராம். "சின்னத் திரையே போதும்ப்பா" என்ற திருப்தியான மனதுடன் இருக்கிறாராம். அடடே !

இளைய தளபதி விஜய்யின் "யூத்"தில் மும்பை மாடல் சாஹீன் ஹீரோயினாக நடிக்கிறார். படப்பிடிப்பு வெகு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. "தமிழன்" நன்றாக வந்திருக்கும் சந்தோஷத்தில், உற்சாகமாக நடித்து வருகிறாராம் விஜய். படமும் பெயருக்கேற்றார்போல "யூத்ஃபுல்"லாக இருக்குமாம்.

அஜீத் நடிக்க "மஹா" என்ற படத்தை நிக் சினி ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி புதிதாகத் தயாரிக்கவுள்ளார். "ராஜா" மற்றும் "திருடா" ஆகியவை முடிந்த பிறகு இந்தப் படம் துவங்குமாம்.

மம்முட்டியுடன் பெரிய அளவில் மோதல் உருவாகி பின்னர் சமாதானம் அடைந்த பிறகு "ஜூனியர் சீனியர்" படம் முடிந்தது. இப்போது பாடல்களும் வெளியாகி விட்டன. படம் ஏப்ரலில் ரிலீஸாம். படத்தில் மம்முட்டியின் ரோல் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டதாம். அம்சவர்தனை வெயிட்டான கேரக்டராக மாற்றி விட்டாராம் தயாரிப்பாளர்-இயக்குநர் சுரேஷ்.

புதுமுக இசையமைப்பாளர் இமானுக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகிறதாம். "தமிழன்" பாடல்களின் எதிரொலிதானாம் இது. சந்தோஷத்தில் மேலும் ஒரு சுற்று பெருத்து விட்டாராம் இமான். இவர் இசையமைப்பாளர் அஸ்லம் பாஷாவின் சொந்தக்காரர் என்பது போனஸ் செய்தி.

"எங்கே எனது கவிதை", "கும்மாளம்" ஆகிய படங்களில் நடித்து வரும் பெங்களூர் கிளியான ரத்தி, ஏற்கனவே தமிழ் டிவி சீரியல் ஒன்றில் நடித்தவர்.

"பேசாத கண்ணும் பேசுமே" படத்தில் குணால்-மோனல் ஜோடியுடன் கூடுதலாக மம்தா என்ற புதுமுகமும் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் மோனலுக்குக் கடும் அதிருப்தியாம்.

மும்தாஜின் செம குலுக்கல் ஆட்டத்தால் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் வியாபித்து விட்ட "மல மல மலே..." பாட்டு கேரளத்தையும் கலக்கி வருகிறதாம். அங்கு நடக்கும் பாட்டுக் கச்சேரி, கல்யாணக் கச்சேரிகளில் இந்தப் பாடல் கண்டிப்பாக இடம் பெறுகிறதாம்.

தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஸ்ருதிகா தனது கண்கள்தான் கவர்ச்சி ஸ்பாட் என்கிறார். கண்ணைக் காட்டியே ரசிகர்களை கவர்ந்து விட முடியும் என்று கூறுகிறாராம் ஸ்ருதிகா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil