»   »  மே 17ல் சிவாஜி ரிலீஸ்!

மே 17ல் சிவாஜி ரிலீஸ்!

Subscribe to Oneindia Tamil

பெரும் எதிர்பார்ப்புக்கு ஆளாகியுள்ள சிவாஜி, மே 17ம் தேதி உலகெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளதாக ஏவி.எம். நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்ளுக்கு நேற்று முதல் விருந்து ஆரம்பித்துள்ளது. சிவாஜி ஆடியோ நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. காலை முதலே சிடி, கேசட்டுளை வாங்க கூட்டம் குய்யோ முறையோவென்று கடைகளை மொய்த்ததால் கடைக்காரர்கள் திக்குமுக்காடிப் போய் விட்டனர்.

வீரா பட ரிலீஸின்ேபாது சிடி-கேசட் விற்பனை பெரும் வரலாறு படைத்தது. அதன் பின்னர் ரஜினி படம் ஒன்றின் கேசட் முதல் நாளிேலேய இப்படி வசூலை அள்ளியது சிவாஜிக்குத்தான் என்கிறார்கள்.

பாட்டுக்கள் ஹிட் ஆகி விட்டதால் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணனும் படு உற்சாகமாக உள்ளார். சிடி-கேசட்கள் சரமாரியாக விற்றுத் தீருவதால் ஆர்டர்கள் வந்தவண்ணம் உள்ளதாம்.

இதனால் சரவணன் மிகப் பெரும் சந்ேதாஷத்தில் ஆழ்ந்துள்ளார். சென்னை நகரில் மொத்த கேசட் விற்பனைக் கடைகள் உள்ள ரிச்சி தெருவில் சிவாஜி கேசட் வாங்க கூட்டம் அலைமோதிக் ெகாண்டிருக்கிறது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 2 லட்சம் சிடிக்களும், 2 லட்சம் கேசட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளதாம். கேசட், சிடிக்கள் கேட்டு ஆர்டர்கள் குவிவதால் நேற்று மாலை 1 லட்சம் சிடிக்களும், கேசட்டுகளும் விநிேயாகஸ்தர்களுக்கு அனுப்பப்பட்டதாம்.

ஆந்திரா, கர்நாடகத்திற்கு அனுப்பப்பட்ட அத்தனை சிடிக்களும், கேசட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டதாம். இன்னும் வேணும் என்று அவர்கள் கேட்டு ஓலை அனுப்பியவண்ணம் உள்ளனராம்.

இந்த சந்ேதாஷத்தோடு பட ரிலீஸ் தேதியையும் ஏவி.எம். சரவணன் வெளியிட்டுள்ளார். அதாவது மே 17ம் தேதி படம் ரிலீஸாகிறதாம். இதுதொடர்பாக ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனராம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos