»   »  சிவாஜி: ஏவி.எம்.முக்கு 60 கோடி லாபம்

சிவாஜி: ஏவி.எம்.முக்கு 60 கோடி லாபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவாஜி படத்தின் உலகளாவிய விநியோக உரிமை மூலம் ஏவி.எம். நிறுவனத்திற்கு ரூ. 60 கோடி லாபம் கிடைத்துள்ளாம்.

சிவாஜி என்ற பெயருக்கு இந்தியாவில் பெரும் வரலாறு உண்டு. இப்து இந்தியத் திரையுலகில் சிவாஜி படம் தனி இடத்தைப் பெற்று விட்டது.

இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 85 கோடி செலவில் இப்படம் உருவாக்கப்பட்டது. அதில் ரஜினிகாந்த்தின் சம்பளம் மட்டும் ரூ. 25 கோடியாம்.

பிற கலைஞர்களின் சம்பள விவரம்,

இயக்குநர் ஷங்கர்-ரூ. 5 கோடி, ஏ.ஆர்.ரஹ்மான் - ரூ. 1 கோடி. விவேக், ஷ்ரியா உள்ளிட்ட பிற நடிகர், நடிகைகளுக்கு மொத்தமாக ரூ. 5 கோடி.

120 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. அதன் மொத்த தயாரிப்புச் செலவு ரூ. 6 கோடி. செட் போட்ட வகையில், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், பிற செலவீனங்களாக ரூ. 15 கோடி செலவானதாம்.

மொத்தமாக ரூ. 80 கோடியைத் தாண்டியுள்ளது செலவுக் கணக்கு. இந்த நிலையில் படத்தை விற்ற வகையில் ரூ. 60 கோடி லாபத்தை ஏவி.எம். நிறுவனம் சம்பாதித்துள்ளதாம். பட விநியோகம், படத்திற்குக் கிடைத்த ஸ்பான்சர்கள் மூலம் இந்த லாபம் கிடைத்துள்ளது. நமக்குக் கிடைத்த தகவலின்படி படத்தின் மொத்த பிசினஸ் ரூ. 140 கோடி என்று தெரிய வந்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய் நடித்த தேவதாஸ் படம் ரூ. 50 கோடி பட்ஜெட்டில் உருவானது. அதுதான் இந்தியாவிலேயே அதிக பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட படமாக இருந்தது. எனவே இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவான ஒரே படம் சிவாஜி மட்டும்தான்.

ஜூன் 15ம் தேதி வெளியான சிவாஜி, தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து தியேட்டர்களில் திருவிழாக் கூட்டம் காணப்படுகிறது. இந்த ஆண்டின் மிகப் பெரிய ஹிட் படம் சிவாஜி என்று அடித்துச் சொல்லலாம்.

சிவாஜியால் படைக்கப்பட்டுள்ள சாதனைகளை முறியடிக்க இன்னொரு ரஜினி படம்தான் வந்தாக வேண்டும். அந்த அளவுக்கு மெகா சாதனைகளைப் படைத்துவருகிறது சிவாஜி.

ரஜினிக்கு இருப்பது போல ரசிகரகள் கூட்டம் இந்தியாவில் வேறு எந்த நடிகருக்கும் இல்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil