twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'சுத்த தமிழ்ல பேசுங்கப்பா...!' - சிவகுமார்

    By Shankar
    |

    Sivakumar
    கோவை: மாணவர்கள் ஆங்கிலம் கலக்காத சுத்தத் தமிழில் பேச முயற்சிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார் நடிகர் சிவகுமார்.

    கோவை சரவணம் பட்டியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி ஒன்றின் தமிழ் மன்றம் தொடக்க விழாவில் நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில், உலகத்தில் 3 ஆயிரம் மொழிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் 6 மொழிகள்தான் செம்மொழிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று தமிழ் மொழி.

    ஆனால் பாருங்கள், தமிழ்நாட்டில் பிறந்து தமிழராக வாழ்கிறோம். தமிழ் பேசுகிறோம் என்பதை தவிர 100க்கு 90 பேருக்கு தமிழ் மொழி அதிகமாக தெரியாது. இதைவிட அவமானம் இருக்க முடியுமா...

    எனவே மாணவர்கள் தமிழில் உரையாடும் பொழுது ஆங்கில கலப்பில்லாமல் தூய தமிழிலேயே பேச வேண்டும். ஆங்கில கலப்பினால் தமிழ் தனது தனித்தன்மையை இழந்து விடுகிறது.

    கல்லூரி பருவத்தில் மாணவர்கள் ஒழுக்கத்தையும் கல்வியையும் இரு கண்களாக கொள்ளவேண்டும். இந்த வயதில் எதையும் சுலபத்தில் கற்றுக் கொள்ளலாம். நீங்கள் நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள்...,", என்றார்.

    English summary
    Actor Sivakumar urges the student community to speak in Tamil in practice. He also advised to avoid English when when speaking in Tamil.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X