»   »  அஜித்தின் வெறித்தன ஆட்டம் - #6YearsOfMankatha

அஜித்தின் வெறித்தன ஆட்டம் - #6YearsOfMankatha

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : விநாயகர் சதுர்த்திக்கு வெளியான விவேகம் திரைப்படம் தற்போது தியேட்டர்களில் நல்ல வசூல் ஈட்டிவருவதாக தொடர்ந்து தகவல் வருகிறது. இதே போல 6 வருடங்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்திக்கு வெளிவந்த ஒரு படம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது.

தல அஜித்தின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக அமைந்த அந்தப் படம் மங்காத்தா. அஜித்தின் 50-வது படமான இது வெளியாகி இன்றோடு 6 ஆண்டுகள் முடிகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ராய் லட்சுமி, வைபவ், பிரேம்ஜி என ஒரு பெரிய பட்டாளமே நடித்திருந்தது. தற்போது 6 வருடங்கள் முடிந்துள்ளதால் ரசிகர்கள் அதை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

மங்காத்தா டா :

'ஏகன்', 'அசல்' என இரு படங்கள் சரியாகப் போகாததை அடுத்து வெங்கட்பிரபுவுடன் இணைந்த இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. வெங்கட்பிரபுவின் ஆட்டம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏகபோகமாகப் பூர்த்தி செய்தது. அஜித்தின் மைல்ஸ்டோன் படத்தை ஹிட் அடிக்க வைத்தது அஜித்தை ரசிகர்களுக்குப் பிடித்தமாதிரி கெத்தாகக் காட்டியதுதான்.

யுவன் :

யுவன் :

மங்காத்தாவில் வெறித்தன பி.ஜி.எம்-களைத் தந்திருப்பார் யுவன் ஷங்கர் ராஜா. அஜித்தின் ஆட்டத்தில் 'அம்பானி பரம்பரை...' முரட்டு ஹிட் அடித்தது. இன்னொரு பக்கம் மென்மையான பீட்டில், 'என் நண்பனே...' கலங்க வைத்தது. யுவனின் இசையில் பாடல்கள் ரசிகர்களை ஆட்டம்போடவைத்தன.

சால்ட் அண்ட் பெப்பர் தல :

சால்ட் அண்ட் பெப்பர் தல :

ஸ்டைலிஷ் அஜித்தைப் பார்த்து ரசித்தவர்களுக்கு முன்னால் சால்ட் அன்ட் பெப்பர் தலையோடு வந்து நின்றார் அஜித். இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல் ''மே வந்தா எனக்கு 40 வயசாகுது'' என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட்கொடுத்தார். கெட்டவங்களுக்கு கெட்டவன் என்கிற சமாளிஃபிகேஷன்கள் எல்லாம் இல்லாமல் "நானும் எவ்வளவுநாள்தான் நல்லவனாவே நடிக்கிறது..." என வில்லன் முகம் காட்டினார்.

களம்

களம்

இன்று எல்லோருக்கும் தேவை பணம். அது எந்த வழியிலாவது வந்தால் போதும் என பெரும்பாலோனோர் நினைக்கிறார்கள் என்பதுதான் சோகமான உண்மை. அதை சரியாகப் பிடித்து கதை அமைத்திருந்தார் வெங்கட்பிரபு. அதை கிரிக்கெட் சூதாட்டத்தோடு பிணைத்து திரைக்கதையை அமைத்திருந்தார் வெங்கட்பிரபு.

அஜித் ஸ்பெஷல் :

அஜித் ஸ்பெஷல் :

அஜித்தின் பைக் ஸ்டண்ட் காட்சிகள், தெறி வசனங்கள் என எல்லாமே ரசிகர்களுக்கு மாஸ் எக்ஸ்பீரியன்ஸாக இருந்தன. இந்தப் படத்தில், ஹீரோ என்று யாருமே இல்லை. எல்லோரும் கெட்டவர்கள். அதிலும் அஜீத் அநியாயத்துக்குக் கெட்டவர். ரசிகர்கள் கொண்டாடுவதற்கான அத்தனை நேர்த்திகளும் இருந்த படம் வெளிவந்து இன்றோடு 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.

எதிர்பார்ப்பு :

எதிர்பார்ப்பு :

வெங்கட் பிரபு - அஜித் - யுவன் காம்போவில் இன்னொரு படத்தை எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். காலம் மனது வைத்தால் கூடிய விரைவில் ஒரு கேங் ஷோவைக் காணும் வாய்ப்பு கிடைக்கும். வெல்கம் பேக் மங்காத்தா டீம்!

English summary
It has been six years since Ajith's 50th film 'Mankatha' hit the screens.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil