»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

நியூ படம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தாலும், பல இடங்ளில் அந்தப் படம் சக்கைபோடு போட்டுவருகிறது. இதனால் பண மழையில் குளித்து வரும் அந்தப் படத்தின் தயாரிப்பாளரான இயக்குனரான எஸ்.ஜே.சூர்யா அடுத்த படத்தை எடுக்கத் தயாராகிவிட்டார்.

சிம்ரன், கிரண், தேவயானியை வைத்து பல கோடிகளை செலவழித்து படத்தை இயக்கி, நடித்து, சூர்யாவேதயாரித்த நியூ தெலுங்கில் பெரும் தோல்வியைத் தழுவியது. இதனால் தமிழில் படத்தை ரிலீஸ் செய்யவினியோகஸ்தர்கள் யாரும் முன்வரவில்லை. கடும் முயற்சிகள் செய்து, பயத்துடன் தான் படத்தை தமிழில் ரிலீஸ்செய்தார்.

புதுப் படங்கள் எல்லாம் ஆகஸ்ட் 15ம் தேதிக்காக காத்திருக்க, இப்போதைக்கு நல்ல படங்கள் ஏதும் போட்டியில்இல்லாத ஆப்-சீசனில் ரிலீசானது நியூ.

ரிலீஸ் ஆன நாள் முதல், படம் குறித்து கடுமையான விமர்சனங்கள் வரத் தொடங்கின. படம் ஆபாசமாக உள்ளதுஎன எல்லாப் பத்திரிக்கைகளும் வரிசை கட்டி எழுதத் தொடங்கின. காரணம் படத்தில் இடம் பெற்றுள்ளவசனங்களும், காட்சிகளும் அப்படி.

மகளிர் சங்கங்கள் படத்துக்கு எதிராக போராடத் தொடங்கின. இங்கேதான் சூர்யாவுக்கு யோகம் அடிக்கத்தொடங்கியது.

எல்லாரும் இப்படி படத்தைக் கரிச்சுக் கொட்டாறாங்களே, அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்ப்போம் எனஎல்லாரும் தியேட்டருக்கு வர ஆரம்பித்தார்கள். இவ்வாறு இலவசமாகக் கிடைத்த பப்ளிசிட்டி காரணமாக படம்இப்போது எல்லா இடங்களிலும் வசூலை வாரிக் குவித்து வருகிறது.

விமர்சனங்களையும் தாண்டி பல இடங்களிலும் படம் மிக நன்றாகப் போய்க் கொண்டிருப்பதாகத் தகவல்.இதனால் போட்ட காசை எடுத்துவிட்டதோடு, கையில் சரளமான நிதி நிலையில் மகிழ்ச்சியாக இருக்கும் சூர்யாஅடுத்து படமெடுக்கத் தயாராகிவிட்டார்.

படத்துக்கு அவர் வைத்துள்ள தலைப்பு ஆஊ. சிம்ரன், கிரணை வைத்து நியூவில் மகா விவகாரமானசப்ஜெக்டை தொட்ட சூர்யா, தனது அடுத்த படத்தின் தலைப்பையே பெரும் பரபரப்பாக்கிவிட்டார்.

நியூ படத்துக்குக் கிடைத்துள்ள எதிர்ப்பு குறித்து சூர்யா கூறுகையில், படத்தை தவறாகப் புரிந்து கொண்டுவிமர்சிக்கிறார்கள். இது ஆபாசப் படமே அல்ல. காமெடியும், கவர்ச்சியும் கலந்த ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம்.இரட்டை அர்த்த வசனம் சேர்க்கப்பட்டது கதைக்குத் தேவைப்பட்டதால்தான். கிரண் பாத்திரம் கதைக்குச் சம்பந்தம்இல்லாதது என்கிறார்கள். கிரணை கவர்ச்சி ஊறுகாயாகத் தான் படத்தில் சேர்த்தோம். ஊறுகாய் இல்லாத மதியசாப்பாடு நல்லா இருக்குமா என்று கேட்கிறார்.

விமர்சனங்கள் குறித்தெல்லாம் துளியும் அலட்டிக் கொள்ளாமல் கவலைப்படாமல் ஆஊ எடுக்கத்தயாராகிவிட்டார் சூர்யா. அதிலும் ஹீரோ அவரே. நாயகியாக சுள்ளானில் தனுஷுடன் ஆட்டம் போட்டசிந்து துலானி நடிக்கிறார்.

சரி, ஆஊ என்று வில்லங்கமான பெயரை வைத்துள்ளீர்களே, பிரச்சினை வராதா என்று கேட்டால், சிரிக்கும் சூர்யாசொல்லும் பதில்,

மறுபடியும் நீங்க தப்பா புரிஞ்சுக்கிறீங்க. ஆஊ என்றால் பாய் பிரண்ட் என்று அர்த்தம். அதைத் தான் சுருக்கிவைத்தேன். இதற்கும் தப்பாகவே அர்த்தம் கற்பிக்கனுமா? என்று நம் மீதே செல்லமாய் கோபம் காட்டினார்.

வில்லங்கமான ஆளுப்பா !

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil