»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஏய் நீ ரொம்ப அழகே படத்தில் ஏற்பட்ட முத்தப் பிரச்சினைக்குப் பிறகு ஷாமுடன், ஸ்னேகா மீண்டும் இணைந்து ஏபிசிடி படத்தில்நடிக்கவிருக்கிறார்.

வசந்த் இயக்கத்தில், ஷாமுடன் இணைந்து ஏய் நீ ரொம்ப அழகே இருக்கே படத்தில் நடித்தார் ஸ்னேகா.

படப்பிடிப்பின்போது ஸ்னேகா உதட்டில் ஷாம் நச்சென்று ஒரு இச் தர, அதை எதிர்பார்க்காத ஸ்னேகா, ஷாமின் கன்னத்தில் விட்டார் ஒருஅறை.


ஆனால், இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என ஸ்னேகா மறுத்தார். படத்துக்கு ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதற்காக இப்படி ஒருசெய்தியை வெளியில் பரப்பியதே இயக்குனர் வசந்த்தான் என்று புகார் கூறினார் ஷாம்.

ஆனால் இந்தச் சர்ச்சைக்குப் பிறகு இருவரும் இணைந்து வேறு படத்தில் நடிக்கவில்லை.

இந் நிலையில் தற்போது இருவரும் ஏபிசிடி என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். இருவரையும் சேர்த்துநடிக்க வைக்கப் போவது இயக்குனர் ஷரவண சுப்பையா.

சிட்டிசன் என்ற "மாபெரும்" படத்தை இயக்கி அஜீத்தின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரும் "திருப்பத்தை" ஏற்படுத்தியவர் ஷரவணசுப்பையா.


அந்தப் படத்தின் மிகப் பெரும் தோல்வியால் அதன் பிறகு ஒரு படம் கூட கிடைக்காமல் ஊருக்கே போய்விட்டார் சுப்பையா.

தற்போது ஏபிசிடி படம் மூலம் மீண்டும் களத்தில் குதித்திருக்கிறார். படத்தின் பெயர் வித்தியாசமானதாக இருக்கிறதே என்று அவரிடம்கேட்டால்,

அதாவது படத்தில் வரும் நான்கு கேரக்டர்களான ஆனந்த், பாரதி, சந்திரா, திவ்யா ஆகியோரின் பெயர்களில் வரும் முதல் எழுத்துக்களைசேர்த்து ஏபிசிடி என்று பெயர் சூட்டியுள்ளேன் என்கிறார்.

நல்லவேளை தமிழில் முதல் எழுத்துக்களை சேர்த்து பெயரிடவில்லை. வைத்திருந்தால் "ஆபாச தி என்று வந்திருக்கும்.


ஷாம், ஸ்னேகா தவிர "புதுக்கோட்டையிலிருந்து சரவணன்" அபர்ணா, சக்ஸஸ் படம் மூலம் அறிகமாகி வெற்றி பெற முடியாமல் போனநந்தனா ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.

படத்தின் கதை ரொம்ப சிம்பிள். ஸ்னேகா, அபர்னா, நந்தனா ஆகிய 3 பேரையும் காதலிக்கிறார் ஷாம். முடிவில் ஷாம் யாரை கைப்பிடிக்கிறார், அவரது வித்தியாச காதல் வெற்றி பெறுகிறதா என்பதுதான் கதையாம்.

சிட்டிசன் படத்திற்கு வசனம் எழுதிய பாலகுமாரனே இந்தப் படத்திற்கும் வசனம் எழுதப் போகிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

முதலில் சிட்டிசன், இப்போது ஏபிசிடி. தமிழில் பெயர் சூட்டி எப்போது படம் எடுப்பீர்கள் ஷரவண சுப்பையா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil