»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல் தவிர இதுவரை மூத்த நடிகர்களுடன் நடிக்க தொடர்ந்துநோ சொல்லி வந்த ஸ்னேகா இப்போது அர்ஜூனுடன் ஜோடிசேர சம்மதித்துள்ளார்.

விஜய்காந்த், சத்யராஜ் என மூத்தோர் பலரும் கூப்பிட்டபோது அவர்களுக்கு கால்ஷீட் தர மறுத்த ஸ்னேகா, வசூல்ராஜாவில் கமலுக்காகதனது கொள்கையைத் தளர்த்தினார்.

அடுத்து ஆயுதம் படத்தின் மூலம் கவர்ச்சி விஷயத்திலும் தாராளமயக் கொள்கையை அறிமுகப்படுத்திவிட்டார் ஸ்னேகா.

கோலிவுட்டை தினந்தோறும் அதிரடியாய் நுழைந்து வரும் புதுமுகங்கள, தெலுங்கு நடிகைகளின் அணிவகுப்பு ஆகியவையேஸ்னேகாவின் இந்த நேற்று இல்லாத மாற்றத்துக்குக் காரணம்.

குஷ்புவின் கணவர் சுந்தர் சி இயக்கத்தில் சின்னா என்ற படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொள்வாரோ மாட்டோரோ என்றடவுட்டில் தான் ஸ்னேகாவை அணுகினார்களாம். ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக உடனே நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார்.

சூட்டிங்கும் தொடங்கி ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது. அடுத்தபடியாக மங்களூர், ஊட்டியில்சூட்டிங் ஷெட்யூல் வைத்திருக்கிறார்கள்.

சுந்தர் பார்முலாவான மசாலா பிளஸ் காமெடிப் படம் தானாம்.

தமிழில் இந்தப் படம் தவிர ஷாமுடன் ஜோடியாக ஏபிசிடி என்ற படத்திலும் மட்டுமே ஸ்னேகா நடித்து வருகிறார்.

இவர் நடிக்கவுள்ள மற்ற தமிழ் புராஜெக்டுகள் எதுவும் இன்னும் உயிர் பெறவில்லை. இதில் லண்டனைச் சேர்ந்த தயாரிப்பாளர்உருவாக்கவுள்ள தமிழ்-ஆங்கிலம் கலந்த ஒரு படமும் அடக்கம்.

சேரனின் அடுத்த படத்தில் நடிக்க இருந்த ஸ்னேகா அதில் நடிக்கப் போவதில்லை என்று கூறப்படுகிறது.

சம்பளப் பிரச்சனை தான்காரணமாம். ஆட்டோகிராப்புக்குப் பின் சம்பளத்தை ஜோதிகா லெவலுக்கு ஸ்னேகா ஏற்றிவிட்டதால், அடுத்த படத்தில் இவரை நடிக்கவைக்கும் திட்டத்தையே சேரன் கைவிட்டுவிட்டார்.

தமிழில் மார்க்கெட் இப்படி நாளுக்கு ஒரு நிலைமையில் இருக்க தெலுங்குப் பக்கமும் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்னேகா. அங்குபாபு ரமணா இயக்கத்தில் ஒரு படத்திலும், சங்கராதி என்ற இன்னொரு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படங்களில் எல்லாம் இதுவரை தமிழில் காட்டாத தாராளத்தைக் காட்டி வருகிறார் ஸ்னேகா.

இப்போது தமிழில் அர்ஜூனுடன் ஜோடி சேர சம்மதித்துவிட்ட ஸ்னேகாவை தங்களது அடுத்த படங்களில் புக் செய்ய இங்குள்ள மூத்தநடிகர்கள் தரப்பில் இருந்து பிரஷர் தரப்படலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil