»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

அது என்ற படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து வரும் ஸ்னேகா, இந்தப் படம் தனக்கு தேசிய விருதுவாங்கித் தரும் என்ற பெரும் நம்பிக்கையில் இருக்கிறார்.

ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று கோடம்பாக்கத்தில் முன்னணியில் இருக்கும் ஒரே தமிழ் தெரிந்த நடிகைசினேகா தான். ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றாலும் தமிழ் குடும்பம்தான். வளர்ந்தது, படித்தது எல்லாம் ஷார்ஜா.

முக்காலே மூணுவீசம் துணி கொடுத்தால் போதும் என்று கவர்ச்சி காட்டி காசு பராக்க வந்திறங்கும் மும்பை,பெங்களூர், ஆந்திர வரவுகளுக்கு இடையே நாகரீகமாய் நடித்து தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளஸ்னேகா பிரம்மப் பிரயத்தனம் செய்து வருகிறார்.

ஆட்டோகிராப் படத்தில் நல்ல பெயர் கிடைத்ததற்காக பெரும் மகிழ்ச்சியில் இருக்கும் ஸ்னேகா, சேரனைவாய்க்கு வாய் புகழ்கிறார். இப்போது தனக்கு மிக வேண்டிய ஸ்ரீ காந்துடன் போஸ் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அது தவிர அஜீத்துடன் ஜனா படத்தில் (ரொம்ப நாளாக இழுத்தடிக்கப்பட்ட படம்) நடித்துமுடித்துள்ளார். இதில் ஸ்னேகாவுக்கு கொஞ்சம் கவர்ச்சியான ரோல். புகுந்து விளையாடி இருக்கிறார்.


இவை தவிர அது என்ற படத்திலும் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார் ஸ்னேகா. இதில் எப்படியாவது தேசியவிருது வாங்க விட வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறாராம். பார்வையற்றவர்களின் நடை, உடைபாவனைகளைக் கவனித்து அதே விதமாக படத்தில் நடிக்க கடும் பயிற்சி எடுத்து வருகிறார்.

அது படம் ஒரு க்ரைம் திரில்லர். இரவு நேரத்தில் நிகழும் சம்பவங்களை மனதைக் கரைக்கும் வகையில் சொல்லப்போகிறாராம் இயக்குனர் ரமேஷ்கிருஷ்ணன். இந்தப் படத்திற்காகவும், ஆட்டோகிராப் படத்திற்காகவும்பார்வையற்றவர்களுடன் நெருங்கிப் பழங்கிய ஸ்னேகா, அவர்கள் படும் சிரமங்களைக் கண்டு உடனே தனதுகண்களை தானம் செய்திருக்கிறார்.


பார்த்திபன் கனவு படத்துக்குப் பின் தனக்கு நிறைய வாய்ப்புக்கள் வராதது கவலை தந்ததாகவெளிப்படையாகவே சொல்கிறார் ஸ்னேகா. என்ன பண்றது தமிழ் பேசத் தெரியாத நடிகைகள் தான் வேணும்னுடைரக்டர்கள் நினைக்கிறாங்க. அதையும் மீறி ஆட்டோகிராப், அது, போஸ் போன்ற வாய்ப்புக்கள் வந்து சேர்ந்ததுஎன் அதிர்ஷ்டம் தான் என்கிறார் சந்தோஷம் கலந்த வேதனையுடன்.

ஆட்டோகிராஃபில் ஸ்னேகாவின் நடிப்பைப் பார்த்த தெலுங்கு இயக்குனர் ரவி தேஜா தனது வெங்கி படத்தில் ஸ்னேகாவை நாயகியாக்கியுள்ளார். கையோடு இரண்டு பாடல்களை ஷூட் செய்ய ஜெர்மனிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

இந்தப் படங்கள் தன்னை தமிழிலும் தெலுங்கிலும் முன்னணிக்குக் கொண்டுபோகும் என்று நம்புகிறார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil