»   »  'எல்லாரும் தவறாம வந்திடுங்க' - மும்முரமாக திருமண அழைப்பிதழ் தரும் சினேகா- பிரசன்னா!

'எல்லாரும் தவறாம வந்திடுங்க' - மும்முரமாக திருமண அழைப்பிதழ் தரும் சினேகா- பிரசன்னா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Prasanna and Sneha
நடிகை சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் மே 11-ந்தேதி திருமணம் நடக்கிறது. இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஜோடியாக நடித்த போது காதலாகி, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கின்றனர்.

முகூர்த்த ஆடைகள், நகைகள் வாங்குதல் என இத்தனை நாள் தீவிரமாக இருந்தவர்கள், இப்போது திருமண அழைப்பிதழ் கொடுக்கும் வேலையில் மும்முரமாகியுள்ளனர்.

சக நடிகர், நடிகைகள், உறவினர்கள், நண்பர்களுக்கு தனித்தனியாக சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்கள்.

கடந்த சில தினங்களில் கமல், அஜீத், விஜய் போன்றோருக்கு பிரசன்னா நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து திருமணத்துக்கு அழைத்தார்.

இதுகுறித்து பிரசன்னா கூறுகையில், "விஜய், அஜீத் போன்றோரை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து திருமணத்துக்கு அழைத்தேன். இருவரும் குடும்பத்தினருடன் என்னை சந்தித்தனர். வாழ்த்தும் சொன்னார்கள். சினேகாவிடம் டெலிபோனில் வாழ்த்து கூறினார்கள். கமல்ஹாசனை ஏற்கனவே சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தோம்," என்றார்.

ரஜினிக்காக காத்திருக்கிறோம்..

அடுத்து ரஜினிக்கும் அழைப்பிதழ் கொடுக்க காத்திருக்கிறார்கள் சினேகாவும் பிரசன்னாவும். கேரளாவில் கோச்சடையான் படப்பிடிப்பு முடிந்து ரஜினி வந்ததும் சந்தித்து அழைப்பு தருகின்றனர்.

கோச்சடையானில் ரஜினி தங்கையாக நடிக்கவிருந்து, பின்னர் நீக்கப்பட்டார் சினேகா என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actors Sneha and her fiancé Prasanna are now too busy in distributing invitations to co actors and VVIPs of Kollywood.
Please Wait while comments are loading...