»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

இனி, தெலுங்குப் படமே வேண்டாம் என்று முடிவுக்கு வந்துவிட்டாராம் ஸ்னேகா.

ஸ்னேகா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் ஆயுதம் படத்தில்பிரசாந்திற்கு ஜோடியாக நடிக்கிறார். கதைப்படி ஸ்னேகா அய்யராத்து மாமி.

ஸ்னேகா சேலை கட்டி நிறைய படங்களில் நடித்திருந்தாலும், மடிசார் கட்டி நடிப்பது இதுதான் முதல் தடவை. அதனால் மடிசார்கட்டுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார். சேலை கட்டி ரெடியாக மட்டும், தினமும் இரண்டு மணி நேரம் செலவிடுகிறாராம். பின்னேசூட்டிங்கில் மடிசார் நழுவி, ரசாபாசமாக ஏதாவது நடந்து விட்டால் என்னாவது?

ஆயுதம் படத்தைத் தவிர்த்து, சந்திரமுகி படத்தில் ஸ்னேகா நடிப்பார் என்று பேச்சு அடிபட்டது. ஆனால் ஸ்னேகாவே அந்தவாய்ப்பைத் தவிர்த்துவிட்டார்.

அதே நேரத்தில் தமிழில் அதிக கையில் படங்கள் இல்லாததால், வேற்று மொழிகளிலும் கவனம் செலுத்து வேண்டிய கட்டாயம்ஸ்னேகாவிற்கு.

ஸ்னேகா வெள்ளித்திரையில் முதலில் அறிமுகமாகியது மலையாளத்தில்தான். பின்பு தமிழில் பிரபலமாகிவிட்டதால், மலையாளப்பக்கம் போகாமல் இருந்தார். இப்போது மீண்டும் ஒரு மலையாளப் படத்தில் நடிக்கிறார்.


காமெடிக்கு முக்கியவத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வரும் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஸ்னேகா நடிக்கிறார்.படத்தில் ஜெயராம்- மீரா ஜாஸ்மீன் ஜோடியும் உண்டு.

இந்தப் படத்தைத் தவிர கன்னடத்தில் ஸ்ரீகாந்திற்கு ஜோடியாக ஸ்னேகா ஒரு படம் நடிக்கிறார். இது நம்ம ஸ்ரீகாந்த் இல்லை.தமிழில் சில படங்கள் நடித்திருக்கும் சிவரஞ்சனியின் கணவர் ஆனந்த ஸ்ரீகாந்த்.

இதேபோல் தெலுங்குப் படம் ஒன்றில் வெங்கடேசுக்கு ஜோடியாக ஸ்னேகா நடிக்கிறார். இது ஆனந்தம் படத்தின் தெலுங்கு ரீமேக்ஆகும். தமிழில் நடித்த அதே கேரக்டரை தெலுங்கிலும் ஸ்னேகா செய்யவில்லை. அதற்குப் பதிலாக தேவயானி நடித்தகேரக்டரில் நடிக்கிறார்.

இந்தப் படங்கள் தவிர்த்து கன்னடத்தில் ரவிச்சந்திரனுக்கு ஜோடியாக ஒரு படமும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருக்குஜோடியாக ஒரு படமும் நடிக்க வாய்ப்பு வந்தது.

இரண்டிலும் நடிக்க ஆர்வமாகப் போன ஸ்னேகா, கதையைக் கேட்டு அரண்டு போய் வந்துவிட்டார். காரணம் மிதமிஞ்சி கவர்ச்சிகாட்டும்படி கதை அமைக்கப்பட்டிருந்ததுதான்.

கன்னட நடிகர் ரவிச்சந்திரன் நம்மூரு பாக்யராஜ் மாதிரி. கதாநாயகிகளைக் கவர்ச்சியாக நடிக்க வைத்து பிழிந்துஎடுக்கக்கூடியவர். அவருடைய எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஸ்னேகா ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டுவந்துவிட்டார்.


தெலுங்குப் படத்தில் வேறுவிதமான சங்கடம் அவருக்கு. கதை கேட்கப் போன இடத்தில் ஜூனியர் என்.டி.ஆர். அநியாயத்திற்குஜொள் விட, ஸ்னேகா அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். இப்போது ஜூனியர் என்.டி.ஆர். ஆனந்தம் படத்தின் சூட்டிங்ஸ்பாட்டிற்கு வந்து விடாமல் தொந்தரவு செய்து வருகிறாராம். அவருக்கு இருக்கும் செல்வாக்கு காரணமாக அங்கு யாரும்அவரைத் தட்டிக் கேட்பது கிடையாதாம்.

இதனால் நொந்து நூலாகிப் போயிருக்கும் ஸ்னேகா, இனி தெலுங்குப் படங்களே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்என்கிறார்கள்.

Read more about: cinema, nazar, sneha, tamil cinema, tamil film

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil