சைப் அலிகான் தங்கச்சி சோஹாவுக்கும் திருமணம்

By Siva

பாலிவுட் நடிகர் சைப் அலி கானைத் தொடர்ந்து அவரது தங்கை நடிகை சோஹா அலி கானுக்கும் திருமணம் நடக்கவிருக்கிறது.

நீண்ட காலமாக காதல் ஜோடிப் புறாக்களாய் வலம் வரும் பாலிவுட் கனவுக் கன்னி கரீனா கபூரும், சைப் அலி கானும் ஒரு வழியாக வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் திருமணம் செய்து கொள்ளவிருக்கின்றனர். இந்நிலையில் சைபின் சகோதரி சோஹா அலி கானும், அவருடைய காதலர் இந்தி நடிகர் குணால் கேமுவும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக பேச்சு அடிபடுகிறது.

அதை இன்னும் சோஹாவும், குணாலும் அறிவிக்கவில்லை. ஆனால் சோஹாவுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரது தாயார் சர்மிளா தாகூர் விரும்புகிறார். சைபின் தந்தை மன்சூர் அலி கான் பட்டோடி காலமான பிறகு தனது பிள்ளைகளுக்கு விரைவில் திருமணம் செய்ய சர்மிளா ஆசைப்படுவதாக அவர்கள் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் மாதத்தில் சைப், கரீனா திருமணம் நடக்கவிருப்பதால் அதைத் தொடர்ந்து சோஹாவின் திருமணமும் நடக்கும் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X