»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விக்ரம் நடிக்கும் ஏவி.எம்மின் ஜெமினி படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்கிறது. பாடல்கள் வெளியாகி விட்டன.வைரத்துவின் வரிகளுக்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.

ஒரு பாடலில், காதலின் தவிப்பை தனது வைர வரிகளில் கண் முன் நிறுத்துகிறார் வைரமுத்து. சாதனா சர்கத்தின் இனிய குரலில்வந்துள்ள அந்தப் பாடல் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணனுக்கும், டைரக்டர் சரணுக்கும் பெரும் பரவசம் தந்ததாம்.வைரமுத்துவை அவர்கள் கட்டிப் பிடித்துக் கொண்டார்களாம்.

நீங்களும் படித்துப் பாருங்கள்,

தீவானா தீவானா
நெற்றி நனைத்தவன் நீதானா?
தீவானா தீவானா
நெஞ்சைப் பிழிந்தவன் நீதானா?
என் வீட்டுக் கோலத்தின்
புள்ளிக்குள் நுழைந்து
காதல் சொல்லும்
மாயக் கண்ணனா?
காதல் எண்ணமே
அய்யோ அசிங்கம் என்று
கண்கள் மூக்கு காது பொத்திக் கொண்டவள்
காதல் காலடி ஓசை கேட்டதும்
வீடு வாசல் கதவு ஜன்னல் திறந்து கொண்டாள்
காதல் உள்ளே வந்து விட்டது - எந்தன்
நாணம் வெளியே சென்று விட்டது.
தோழி ஒருத்தியை நேரில் நிறுத்தி
நான் காதலுற்ற சேதியைச் சொல்ல
நெஞ்சு முட்டுதே
ஆனால் நாவிலே
ஆனா ஆவன்னா
ரெண்டெழுத்தைத் தவிர
வேறு வார்த்தை இல்லையே
ஆசை வந்து தத்தளிக்கிறேன்

என் பாஷை மாறி உச்சரிக்கிறேன் .... என்று போகிறது பாடல்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil