»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

வழக்கம் போலவே, பாட்டுக்கள் இந்த ஆண்டிலும் தமிழ்த் திரையுலகைக் கலக்கின.

படம் ஓடுகிறதோ, இல்லையோ, நல்ல பாட்டு இருந்தால், அந்தப் பாட்டுக்காகவே படத்தைப் பார்க்கும் கூட்டம் தமிழகத்தில் நிறையவே உண்டு.அந்த வரிசையில், சில படங்கள் அதுபோல பாட்டுக்காகவே ஓடியுள்ளன.

ஜெமினியின் ஓ..போடு, யூத் படத்தின் ஆல்தோட்ட பூபதி, ரெட் படத்தின் ஒல்லிக் குச்சி உடம்புக்காரி,உன்னை நினைத்து படத்தின் எங்கே அந்த வெண்ணிலா, சில் சில் சில்லல்லா, ரோஜாக் கூட்டம் மற்றும் அழகி படத்தின்எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்களாகி 2002ல் தாளம் போட வைத்தன.

அதே போல பகவதி, ஏப்ரல் மாதத்தில் ஆகிய படங்களின் ஆடியோ கேசட் விற்பனையும் எகிறியுள்ளது.

இளையராஜாவின் இசையில் வெளியான ரமணா படத்தின் பாடல், பல சேட்டிலைட் டிவிக்களின் டாப் டென்வரிசையில் முதலிடத்தில் இடம் பெற்றுள்ளது.

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பாபா பாட்டுக்கள் அதிகம் பிரபலமாகவில்லை. ஒரு பாட்டைத் தவிர பிறபாட்டுக்கள் ரஜினி ரசிகர்களையும், பொது ரசிகர்களையும் கவரவில்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil